உன்னிடம் விட்டுவந்த என் இதயம் 555
![](https://eluthu.com/images/loading.gif)
என்னுயிரே...
நீ உன் தோழியோடு என்
வீட்டை கடந்து செல்லும்...
ஒவ்வொரு நாளும்
நான் ஏங்கி தவிக்கிறேன்...
தெருமுனையை கடக்குமுன்...
ஒருமுறையேனும் திரும்பி
பார்க்க மாட்டாயா என்று...
என் பார்வையை உன் திசையை
நோக்கி சமர்ப்பிக்கிறேன்...
சில நேரங்களில்
என்னை அறியாமல்...
உன்
பாதச்சுவடுகள் அருகில்...
என் பாதசுவடுகளை
பதிய வைக்கிறேன்...
நீ விட்டு சென்ற
பாதசுவடுகளின் அருகில்...
எளிதாக சேர்ந்து விட்டது
என் பாதச்சுவடுகள்...
நான் உன்னிடம் விட்டு வந்த
என் இதயத்தோடு...
உன் இதயம்
இணையப்போவது எப்போதடி கண்ணே.....