நாக்கு

நாக்கு
======
மழலைகள் பேச மகிழ்ச்சியைக் கூட்டும்
கிழடுகள் பேசக் குழறும் – அழகிகள்
முன்னால் அழகை மொழியும் அதிசயக்
கன்னலின் சாறுறங்கும் காடு.
**
நல்லது பேசும். நலிவுற்றா லில்லாதப்
பொல்லா ததுகளும் பேசியே – அல்லலில்
தள்ளிட ஆயுதந் தானாகிச் சார்ந்தவர்
உள்ளத்தைக் கொல்லும் உணர்.
**
சாடையும் பேசும் சரிசமமாய் பேசும்நா
மேடையி லென்றும் மிகைபேசும். – பாடையில்
போகையில் மட்டும் பதில்பேசா மல்தீய்க்கு
ஈகையா யாகும் எரிந்து.
** மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Jan-19, 4:20 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 97

மேலே