கவிதை
நீ சேலை கட்டிக்கொண்டு
நடக்கையில்
காற்றில் தவழும் முந்தானை
தலைப்பை தேடிக்கொண்டிருக்கிறாய்
நானோ சேலை கட்டிய
இந்த கவிதைக்கு
தலைப்பை
தேடுகின்றேன்!!!
பெண்ணே
நீ மழையில்
நனையாதே
கவிதை மழையில்
நீ நனையலாம்
மழையில் கவிதை
நனைதல் தகுமோ?
நீ
எத்தனை புள்ளிவைத்து
கோலமிட்டாலும்
என்னை காணும்போது
வெட்கத்தில்
உன் கால்
கட்டைவிரல் இடும் கோலத்திற்கு
இணையாய் எதைச்சொல்ல....
சில நிமிடங்களில்
கடக்கும்
புயலும் இருக்கத்தான்
செய்கின்றது
ஆம் நீ என்னை
கடந்து செல்லும்போதும்
அப்படித்தான் என்
மனது இருக்கின்றது....
பெண்ணே
கொஞ்சம் நிமிர்ந்து
நட பாவம்
நிலமகள்...
பார்வையால் காயப்படுத்திவிட்டு
அதற்கு
மருந்தாய் புன்னகையை
சிதறவிட்டு போகின்ற
மருத்துவத்தை எங்கே
கற்றுக்கொண்டாய் ....
உன்னோடு
பேசிக்கொண்டிருக்கையில்
சட்டென்று துள்ளிக்குதித்து
எறும்பு
கடித்துவிட்டதென்றாய்
வார்த்தைப்பிழை
எறும்பு உன்னை சுவைத்திருக்கும்
என்றேன் முறைத்துகொண்டே
நகர்ந்து சென்றாய் வெட்கத்தோடு!....
தனக்குத்தானே பேசிக்கொண்டாள்
பைத்தியம் என்பார்கள்
ஆனால் நீ
கண்ணாடி முன்
பேசுவதை அழகு
என்று மட்டும் தானே
சொல்லமுடியும்.