இதுவும் சுதந்திரபோரட்டம் தான்
அடிமை இந்தியாவில்
பிறப்பெடுக்க பிரயாசை பட்டதுண்டா..!
சுதந்திர போராட்டத்தில் பங்கெடுக்க இயலவில்லை..
இயலாமையை எண்ணி
நெஞ்சம் குமுரியதுண்டா...
எத்தனை சுதந்திர போராட்டவீரர்களின் வரலாற்றினை நீ அறிவாய்..
எத்தனை நாள் தான்
பிறர் வரலாற்றினையே
நீ..
படித்துக்கொண்டிருப்பாய்...
ஏ இளைங்கனே..!
இதுவும்
சுதந்திரபோரட்டம் தான்..
ஆழிப்பேரலையாய்
ஆர்ப்பரித்து வா...
உணர்வுத்தீயை
ஊரெல்லாம்
விதைத்துவிட்டு வா..
எதிர்கொள்ளும்
பெருமலைகளும்..
சிறுமண்துகள்களாக
கடந்து வா..
ஊழலுக்கு எதிராய்
உடைவாள் உருவி
புஜமுயர்த்தி புயலென
உருவெடுத்து வா...
நாம் வீழ்ந்தாலும்
நம் சந்ததியாவது
வாழட்டுமே..
யாருக்கும் கடன்படாமல்..!
- மகா