காதலுக்கு கண்ணில்லை இதுதானோ

யாரென்றே தெரியாது
யாருக்கும்

இருவரும் சந்திக்கும்
நாள்வரை

சந்தித்தப்பின்னே
தெரிந்தவரும்

தெரியாது போயினர்

காதலுக்கு கண்ணில்லை
இதுதானோ

நாம் மட்டும்தான்
உலகம்

என்றானது நமக்கு

இதுதானே உறவுகள்

நம்மீது தொடுத்த
வழக்கு

காதல்மீது கொண்ட
பிணக்கு

பிரித்துவிட போட்டது
கணக்கு

தேவையில்லாத சிரமம்
எதற்கு

என்றே உலகுக்கு நன்றி
சொல்லி

நகர்ந்திடுவோம் காதலராகவே

காதலில் ஜெயித்தவர்களின்
கணக்கில் வரவுவைத்து..,

எழுதியவர் : நா.சேகர் (9-Jan-19, 12:08 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 242

மேலே