நான் ஒரு பேதை மேதை அல்ல

நான் ஒரு பேதை ! மேதை அல்ல !!
******************************************************************
தென்னஞ் சோகைகளைத் திரட்டிச் சேர்த்துவைத்து
பின்னியிடை வெளியிலாது பேதை ஒரு குடிசையிட்டேன்
ஒண்டும் குடில்தனிலே ஓட்டைவழி கதிர்நுழைய
என்னறிவின் ஓட்டைகண்டேன் இறையொளியின் வேட்டையன்றோ ?

(என்னதான் கவனமாக இடைவெளியிலாது ஓலையினால் குடில் அமைத்தாலும் கதிரவனின்
ஒளிக்கீற்று உள்ளே விழுகிறதே . அது நம் அறிவில் ஓட்டையா ? இல்லை இறையவனின்
வேட்டை . எப்படியாவது அவன் நம்மிடம் அருகிருந்து நம் செயல்களை நோக்கியே இருப்பவன்
என்ற பொருள்பட இப்புனைவு )

எழுதியவர் : சக்கரைவாசன் (9-Jan-19, 5:50 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 96

மேலே