பச்சக்கிளி

பச்சக்கிளி ஏன்டி
நீயும் என்ன பாக்குற-நான்
கட்டுக்கடங்காத காள
கீழ சாயிறேன்...
கண்ணுப்படாத சின்னப்பொண்ணாக
நீயும் பேசுற
சுத்திப்போடாத உன்சிரிப்ப நான்
பறிக்க பாக்குறேன்
உன்ன கண்டாலே
நெஞ்சில சாகும் பயங்குறையிது
பயங்குறையிதடி!
தேன்மிட்டாய் போல இனிக்கிற நீ
நெஞ்சில போயி செறிக்கலயே
உயிர போட்டு உருக்குரியே
பயிர போல சலிக்கிறியே
பார்க்கும் விழியில் மேகத்தையே
நிழலில் கோர்த்து போகுறியே
பணக்காரன் நானில்ல-கண்
கலங்காம காப்பேனே
உயிர்கூட தாரேன் பெண்கிளியே!
கரண்டுல ஓடும் காத்தாடிப்போல
கண்ணுரெண்ட பார்த்து நான் சுத்திபோனேன்
கடவுள் சுமைய பொறுத்துக்கிட்டேன்
காதல் சுமைய பொறுக்கலையே
நீச்சல் அடிக்க தெரிஞ்சவன் நான்-உன்
கண்ணில் நீந்த தெரியலயே
என்னுடல்கூட வேண்டானு
போவேனே உன்னோடு-உன்
சிரிப்பொன்று போதும் பெண்கிளியே!!!

எழுதியவர் : sahulhameed (11-Jan-19, 3:04 pm)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 61

மேலே