காதலில் தோல்வி
'அன்பே, அமுதே, அருங்கனியே, ஆருயிரே'
என்றெல்லாம் நித்தம் நித்தம் என் காதருகே
சொல்லி சொல்லி காதலை வளர்த்தாய் என்று
நான் எண்ணி எண்ணி எனக்குள் நம்
காதலுக்கோர் கற்பனைக்கோட்டை எழுப்பிவர
ஒரு நொடியில் இக்கோட்டையை அது கட்டி
முடிக்கும்முன்னே இடித்து தூள் தூளாக்கிவிட்டாய்
அந்த ஒரே சொல்லால், ஆம் கண்ணே
'இதை எல்லாம் காதல் என்று எண்ணிடாதே 'என்று
சொல்லி பின் என்னவாம் என்று நான் கேட்க
இது ஒரு 'கேளிக்கை' எனக்கென்றாய் .....................
இது என் இதயத்தில் நான் பூட்டிவைத்த
காதலுக்கோர் மரண அடி என்னுயிர் துடிக்க
காதல் தோல்வியை தாளாது துடிக்க . துடிதுடிக்க.