காதல்

கண்ணே, இன்று இப்படியோர்
பேசாமடந்தைப்போல் என்னெதிரே
மௌனம்போர்த்தி நிற்பதேன் நீ....
உன் மௌனம் இந்த முழு நிலவு
குளிர்பொழியும் மோகன இரவல்
என்னை வதைக்குதடி பெண்ணே
எழிலாய் மலர்ந்த மல்லிகைப்பூ
மயக்கும் வாசம் வீசாதிருந்தால்
எப்படியோ அப்படி இதை உணர்ந்திடுவாயோ
மௌனம் களைந்திடுவாயோ என்னை நாடி ஓடி
வருவாயோ நிலவு காயும் இவ்விரவில்
ஓடும் நதியில் படகில் அமர்ந்து விடியும் வரை
காதல் கீதம் பாடி விளையாடி கரை சேர்ந்திடுவோமே
கதிரவனின் பரிதிகள் கீழ்திசையை வந்தடையும் முன்னே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Jan-19, 4:36 pm)
Tanglish : kaadhal
பார்வை : 198

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே