வெற்றியின் பாதை

வெற்றி அனைவருக்குமானது
அனைவரும் விரும்புவது

தேர்வில் வெற்றி
தொழிலில் வெற்றி
காதலில் வெற்றி
அனைத்திலும் வெற்றி

வெற்றி என்பது போராட்டமல்ல
அது ஒரு விளையாட்டு

தோல்வி கூட
தள்ளிபோடப்பட்ட வெற்றிதான்
தோல்விக்கும் வெற்றிக்குமான இடைவெளி
கூடுதல் முயற்சியினால் சிதறடிக்கப்படுகின்றது
வெற்றி கைகூடுகிறது

தன்னால் வராது வெற்றி
நமக்கான திறமையுடன்
திட்டமிட்டுச் செயல்பட்டால்
தேடி வரும் வெற்றி
படர்ந்திடும் நம்மை சுற்றி

முயற்சிகள் தவறலாம்
முயற்சிப்பது தவறலாமா
விவேகமும் விடாமுயற்சியும்
வெற்றிப் பயணத்தின் உற்ற நண்பர்கள்

வெற்றியும் தோல்வியும்
நாணயத்தின் இரு பக்கம்
தடையை படியாய் மாற்றுவதே
வெற்றியின் விதை
விதை விருச்சமாவதும்
படர்ந்து பரவுவதும்
நாம் கொண்ட நம்பிக்கை

சிறிய தொடக்கத்தின் புறப்பாடே
பெரிய வெற்றியின் வெளிப்பாடு

சபதம் ஏற்போம்
நமக்கான திறமையை வரையறுப்போம்
குறிக்கோளை நிர்ணயிப்போம்
தோல்வி கண்டு துவள மாட்டோம்
வெற்றி எட்டும் வரை ஓய மாட்டோம்
வாய்ப்புகளை நம் வசம் ஆக்குவோம்
வாழ்வில் வளம் பெறுவோம்.








koo

எழுதியவர் : (11-Jan-19, 9:09 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : Vettriyin paathai
பார்வை : 58

மேலே