காதல் தோல்வி

💜💓💜💓💜💓💜💓💜💓💜

*காதல் கவிதை*


*கவிஞர் கவிதை ரசிகன்*

💜💓💜💓💜💓💜💓💜💓💜

என் இதய வீட்டை
உன் பெயருக்கு
எழுதி வைத்து விட்டது
தெரிந்த பின்னும்
பெண்ணே!
காலி செய்து கொண்டு போகலாமா
இனிமேல்
என் இதய வீட்டை
யாருக்கும் விற்கவும் முடியாது
யாரும் வாங்கவும் முடியாது

உன் நினைவுகள்
என்னிடம்
அமுதமாக இருக்கிறது
பிறகு ஏன்
செத்துக் கொண்டிருக்கிறேன்
ஓ...
அளவுக்கு மீறி இருக்கின்றதோ...!

என் விழியில்
கண்ணீர் மழை
பொழிகின்றது....

உன் உதடு என்னும் ஏர்
என் கன்னம் என்னும் நிலத்தை உழுது
முத்தம் என்னும் பயிர்
விளைவிக்காமல் போனதால்
கன்னம் என்னும் நிலத்தில்
தாடி என்னும் களைகள்
முளைத்துள்ளது....

ரோஜா இதழை
பார்க்கும்போது
உன் முகம் ஞாபகத்திற்கு வருகிறது
அதன் முல்லை பார்க்கும்போது
என்னுடைய இதயம்
ஞாபகத்திற்கு வருகிறது.....

நீ என்னை ஏமாற்றி விட்டு போகலாம்
ஆனால்
என் காதல்
ஏமாற்றி விட்டு போகாது.....!

கவிதை ரசிகன்

💜💓💜💓💜💓💜💓💜💓💜

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (12-Jan-19, 12:38 am)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 33

மேலே