தனிமையே நிலையோ

தனிமையே நிலையோ .
கண்ணீர் திவலையோ கண்ணில் .
மனதிலே பாரம் .
தாங்கமுடியா காதல் சோகம் .
கண்ணிலே நம் காட்சிகள் துளியாய் விழுதே .
நெஞ்சில் உன் எண்ணங்கள் துடிப்பாய் துடிக்குதே .

நீயின்றி நான் காய்கின்றேனே
வானின்றி கான் காய்ந்து போல் .
நீயின்றி நான் வீழ்கின்றேனே
தாயின்றி சேய் வீழ்வது போல் .

ஏனோ !
பெண்ணே பிரிந்தாய் ...
கண்ணில் !
நீரை கொடுத்தாய் ...
மண்ணில் என்னை புதைத்தாய் ...
நான் மண்ணோடு மக்கி போகின்றேனே .
ஒரு பெண்ணாலே நெஞ்சம் நோகின்றேனே .

உன் பார்வை என் சோர்வை நீக்க வருமா .
இல்லை ... தாக்க வருமா .
நீ போனாய் உன் நினைவோ என்னிடம் .
நீ ... போனாய் உன் நினைவோ என்னிடம் .
நான் சாகும் வரைக்குமே அதுவே என் நெஞ்சகம் .

மண்ணைத் தோண்டி அதில் நெஞ்சம் புதைத்து கண்ணீரை நான் ஊற்றுகிறேன் .
பெண்ணே ... கண்ணாலே காதல் சாற்றுகிறேன் .

எதிர்காலம் நீ என்று நிகழ்காலம் நினைத்திருந்தேன் மழைக்காலம் கண்ணில் தந்து மனமெங்கும் இடியை தந்தாய் .

போதும் .... போதும் .... வலிகள் கண்டுவிட்டேன் . கண்ட வலியில் பெண்கள் புரிந்துகொண்டேன் .

எழுதியவர் : M. Santhakumar . (11-Jan-19, 8:21 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 607

மேலே