நல்ல உள்ளம்

பூம்புகார் என்னும் ஊரை சேர்ந்தவன் கார்த்திகேயன் .அவன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவன் வாரந்தோரும் சனிகிழமையும்,ஞாயிறுக்கிழமையும் பக்கத்து ஊரில் உள்ள நூலகத்திற்கு செல்வான்.வீட்டிற்கு மதியம் மூன்று மணியளவில் வீடு திரும்புவான். பின் கை,கால்களை அலம்பிவிட்டு சிறு தின்பண்டங்கள் தின்பான்.பிறகு பாட புத்தகங்களை படிப்பான்.என்றாவது ஒருநாள் அவனுடைய அப்பா வேலை செய்யும் உப்பு தொழிற்சாலைக்கு செல்வான்.அதேபோல் ஒருநாள் அப்பாவை பார்க்க தொழிற்சாலைக்கு சென்றான்.அப்போது அங்கு ஒரு சிறுவன் வேலை செய்வதை பார்த்தான்.உடனே அச்சிறுவனிடம் சென்று நீ ஏன் இங்கு வேலை செய்கிறாய் என்று கேட்டான் .அதற்கு அச்சிறுவன் ,என் அப்பா இங்கு வேலை செய்கிறார். அவருதான் என்னை வேலை செய்ய சொல்லி அழைத்தார். அனால்,நான் படிக்கவேண்டும் வரமாட்டேன் என்று மறுத்தேன். ஆனால் என்னுடைய அப்பா என்னை மிரட்டி நீ வரவில்லை என்றால் படிப்பை பாதியிலே நிறுத்திவிடுவேன் ,வாரம் இரு நாட்கள் அதுவும் சனி,ஞாயிறு மட்டும் தானே அது கூட உன்னால் வர முடியாத என்று அப்பா என்னை அடித்து வேலைக்குவரவழைத்தார் .பேசிகொன்டே இருந்த அச்சிறுவன் தீடிரென மயங்கி விழுந்தான்.கார்த்திகேயன் உடனே எல்லோரையும் கூப்பிட்டான் .இயந்திரம் ஓடிக்கொண்டிருந்த சத்தத்தில் யாருக்கும் அவன் கூப்பிட்டது கேட்கவில்லை.அதனால் அவனே முதலுதவி பெட்டி எடுத்து வந்து மருந்துகள் கொடுத்து முதலுதவி செய்தான்.பிறகு விஷயம் தெரிந்து எல்லோரும் ஓடிவந்தார்கள் .பின் கார்த்திகேயனை எல்லோரும் பாராட்டினார். பின்பு எல்லோரும் ஏற்கனவே சின்ன பசங்க வேளைக்கு கூட்டிடுவாராத இது அவன் உயிருக்கே ஆபத்து ,படிப்பும் கெட்டுப்போய்டும்னு சொல்லிருகோம். நீ கேக்கவே இல்ல இப்பபாரு என்னஆச்சுனு என்று திட்டினார்கள் .அச்சிறுவனின் தந்தை தலை குனிந்து போனார் .உடனே கார்த்திகேயன் நாம் ஏன் தன் தந்தை உதவியுடன் காவல் நிலையத்திற்கு சென்று இன்னும் சிறுவர்கள் வேலை செய்கிறார்கள் என்று புகார் அளிக்கக்கூடாது என்று யோசித்தான் .மறுநாள் தன் தந்தையோடு காவல்நிலையத்திற்கு சென்று குழந்தை தொழிலாளர்கள் இன்னும் பல தொழிற்சாலைகளில் வேலைசெய்கிறார்கள்,நீங்கள் உடனே அவர்களை கண்டுபித்து கல்வி அளிக்க உதவி செய்ய வேண்டுமாறு எழுதி கொடுத்தான். அங்கிருந்த எல்லோரும் வியந்தனர் .உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது .பின் காவல் நிலையத்தின் சார்பாக அவனுடைய நல்ல உள்ளதை பாராட்டி அவனுக்கு விருது வழங்கினார் .

எழுதியவர் : திவ்யா (12-Jan-19, 10:55 pm)
சேர்த்தது : DIVYA
Tanglish : nalla ullam
பார்வை : 598

மேலே