காய்ந்த மரமாய்
காய்ந்த மரமாய்
சிறகொடிந்த கிள்ளையாய்
மனம் வாடி துயர் உற்று
விழிகளில் நீர் வடிய
ஏனோ செய்வதறியாது நிற்கின்றேன்
சிரித்தும் அழுதும்
இன்புற்றும் துன்புற்றும்
தடுமாறியும் வைராக்கியம் கொண்டும்
தனித்து நிற்கின்றேன்
சிலையென ஒரு போதும் ஒரே இடத்தில் இருந்ததில்லை
இன்று வடித்த சிலையாய்
இமைக்க மறந்து உண்ண மறந்து திரிகிறேன்
செய்வதறியாமல் நிலை தடுமாறி செல்கிறேன்....
எங்கே செல்வதென்று அறியாமல்