மூலதனம்

அழகென்ற இல்லாத ஒன்றை

எது அழகென்று புரியாத
ஒன்றை

மூடிவைத்து மூடிவைத்து விலக்கி
பார்க்க ஆசைமூட்டி

இனவிருத்திக்காக மட்டுமே கூடல்
என்ற

பிரபஞ்ச உண்மையை பொய்யாக்கி
இன்று

விலக்கிகாட்டி முழுசாக பார்க்க
தூண்டி

வக்கிரங்கள் வகைபடுத்திய
புணர்தல்

மிகைப்படுத்தப்பட்ட கள்ளசந்தைப்
மூலதனமாய்

பாதுகாப்பு மிக்க மாளிகையில்
சத்தமின்றியும்

பாழடைந்த கட்டிடங்களின் மறைவிடங்களில் வெளிப்படையாகவும்

வக்கிரங்களை கொட்டும் குப்பைக்
கூடையாய்

பிறப்புறுப்பும்,மலத்துவார,வாய்
திறந்திருக்க

காமுககூட்டம் அதில் குப்பையை
கொட்ட வரிசையில்

எழுதியவர் : நா.சேகர் (13-Jan-19, 2:01 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : moolathanam
பார்வை : 81

மேலே