பொங்கல் பொங்கல்

பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கல்
தித்திக்கும் கரும்பும் தேன் போல நெய் சொட்ட சொட்ட பச்சரிசி பொங்கலும்
திகட்ட திகட்ட உண்டு
கொண்டாடிவோம்
பழையன பொசுக்கி
புதியன புகுத்தி
வேப்பந்தலையும் ஆவாரம் தலையும் பூலாம்பூவும் ஒன்றாய் இணைத்து காப்பு கட்டி
அவரையும் பூசணிக்காயும் பருப்பும் பலவகையாய் கொண்டு படையலிட்டு
உண்டு மகிழ்ந்திடுவோமே
கதிரவன் எழும்முன்னே
எழுந்து வாசல் தெளித்து வண்ணவண்ணணமாய் கோலமிட்டு
கிழக்கே பார்த்து புதுபானையில் பொங்கலிட்டு
கோலத்தில் பூசணிப்பூவும் மஞ்சளும் பழமும் வைத்து
கரும்பும் வைத்து
ஞாயிற்றை வணங்கி கொண்டாடிடுவோம்
மாடு ஆடு எல்லாம் சுத்தம் செய்து மாட்டின் கொம்பிற்கு வண்ணமிட்டு பட்டியிலே தெப்பக்குளம் கட்டி மாட்டை நிற்க வைத்து
பொங்கலிட்டு தித்திக்கும் கரும்போடு கொண்டாடிடுவோம்
ஊரே ஒன்று கூடி விழா நடத்தி
சிறப்பாய் கொண்டாடிடுவோம்
உறவினர் அழைத்து பொங்கலிடுவோம்
கறி சமைத்து உண்டிடுவோம்
கறிநாளன்று ....
உழவனின் திருநாளாம்
உழவுக்கு ஒரு பெருநாளாம்
அதுவும் தைத்திருநாளாம்
தை பிறந்தால் வழி பிறக்கும்
கதிர் முற்றி தங்க வயல் கொழிக்க
அறுவடை செய்திட வரும் தங்க நாளாம்
சிறந்த நாளாம்
அது தைத்திருநாளாம்
பொங்கலோ பொங்கலென்று குலவியிட்டு
பொங்கிடுவோம் பொங்கல்
பொங்கல் வாழ்த்துக்கள்

எழுதியவர் : பிரகதி (13-Jan-19, 10:05 am)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : pongal pongal
பார்வை : 6966

மேலே