போகிப்பண்டிகை

பழையன கழிதல்
புதியன புகுதல்

வருடம் முழுக்க
உபையோகித்து

உதவாது போன

எரிக்க கூடிய
அத்தனையும்

எரிக்க ஒரு
பண்டிகை

மனதில் சேர்ந்து
உள்ள குப்பையை

எப்பொழுது எரிக்க?

புகையில்லா போகி
கொண்டாடிட

அறிவுருத்தல் நகரெங்கும்

கொண்டாட்டங்கள்
எரிந்து போன

புகையும் உள்ளங்கள்

புகைச்சலோடு உலா
வருகின்றதே

அந்த புகையை
எப்படி போக்க

இம்முறையேனும்
புகையில்லா

போகி கொண்டாடிட

மனகுப்பைகளை
கொளுத்துவோம்

மனப்புகையை விரட்ட..,

எழுதியவர் : நா.சேகர் (13-Jan-19, 12:21 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 456

மேலே