தூக்கனாங்குருவிக் கூடு

அறிவியல் கதை

நான் காதலித்து திருமணம் செய்த என் கணவர் ரமணன் ஒரு கட்டிடக் கலைஞர். அவரை நான் முதலில் சந்தித்தது நான் வேலை செய்யும் நிறுவனத்தின் மீட்டிங் ஒன்றில் . எனக்கு அப்போது வயது இருபத்தியோன்று. என் பெற்றோருக்கு நான் ஒரே மகள் அதனால் எனக்கு அவ்வளவு கட்டுப்பாடு இருக்கவில்லை. நான் ஆங்கிலத்தில் எம் ஏ செய்து முடித்தபின் எனக்கு கிடைத்தது ஒரு அமெரிக்க பல மாடிக் கட்டிடங்கள் உருவாக்கும் மல்கம் கட்டிட நிறுவனத்தில். அந்த நிறுவனத்தில் சுமார் 200 பேர் வேலை செய்தார்கள் . அதில் பத்து பேர் கட்டிடப் பொறியாளர்களும், ரமணன் என்ற கட்டிடக் கலைஞரும் வேலை செய்தார்கள் . அதன் உரிமையாளர் மல்கம் என்ற அமெரிக்கர். மல்கத்தின் பேர்சனல் செக்கர்டரியாக நல்ல சம்பளத்தில், சலுகைகளோடு எனக்கு வேலை கிடைத்தது என் அதிர்ஷ்டம். அடிக்கடி வேலை விசயமாக ரமணனை நான் சந்தித்த போது அவரின் அமைதியான போக்கும், புத்திசாலித்தனமும், சிரித்த முகமும் என்னைக் கவர்ந்தது . அதிகம் பேசமாட்டார். அடிக்கடி எங்களிடையே வேலை விசயமாக ஏற்பட்ட சந்திப்புகள் எங்களின் காதலுக்கு வித்திட்டது என் முடிவை என் பெற்றோருக்கு சொன்ன போது என் அம்மா சொன்ன பதில் எனக்குப் புதிராக இருந்தது

“வசந்தி நான் உன் ஜாதகத்தை பிரபல ஜோதிடர் ஒருவரிடம் காட்டினேன் அவர் அதைப் பார்த்து விட்டு சொன்னார் உன் ஜாதகத்தில் செவ்வாய் குற்றம் இல்லை என்று, ஆனால் உன் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டை பாவக் கிரகங்கள் பாரப்பதால் குழந்தை பாக்கியம் உனக்கு மிகக் குறைவாம் . அதற்கு ஈடுகொடுக்கும் ஆண் ஜாதகம் உள்ள ஒருவனைத் தேடி காதலித்து நீ திருமணம் செய்தால் சந்தான தோஷம் நீங்கலாம் . நீ விரும்பும் ரமணன் என்பவரின் ஜாதத்தை வாங்கி வா பொருத்தம் பார்ப்போம் பொருந்தினால் எங்களுக்கு உன் திருமணத்துக்கு ஆட்சேபனை இல்லை ”.

“அம்மா இந்த காலத்தில் ஜாதகம் பார்த்து திருமணம் செய்பவர்கள் மிகக் குறைவு . அதோடு என்னக்கு அதில் நம்பிக்கை இல்லை .எங்கள் இருவரின் மனங்களும் பொருந்தி விட்டது . அதுவே நல்ல பொருத்தம் என் விருப்பப்படி ரமணனை திருமணம் செய்ய விடுங்கள், அவருக்குப் பெற்றோர் இல்லை. சீதனம் ஒன்றும் அவர் கேட்கப் போவதில்லை. நல்ல உத்தியோகம் , நல்ல சம்பளம். நல்ல மனிதர் . நல்ல குணம் அவருக்கு”
என் அப்பா என் அம்மா சொன்ன கோட்டைத் தாண்டமாட்டார் என்று எனக்குத் தெரியும்.

என் பெற்றோரின் ஒப்புதலை எதிர்பார்க்காமல் நான் முடிவு எடுத்தேன் . அவர்கள் இருவரும்
வேண்டா வேறுப்பாக என் திருமணத்துக்கு கோவிலுக்கு வந்தார்கள். எனக்கு திருமணம் ஆகும் போது எனக்கு வயது இருபத்தைந்து .

திருமணத்துக்குப் பின் நானும், ரமணனும் தனிக்குடித்தனம் போனோம் . எங்கள் இருவருக்கும் ஒரு காரும், டூ வீலரும் இருந்த படியால் நகரத்தின் ஒதுக்குப் புறத்தில் மூன்று அறை உள்ள ஒரு பங்களாவை பின் வளவில் ஒரு தோட்டத்தோடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்தோம் . சமையலுக்கும் வீட்டை சுத்தமாக வைக்க ராஜம்மா என்ற ஐம்பது வயது விதவை இருந்தாள்.

எங்கள் இருவருக்கும் திருமணமாகி முதல் ஐந்து வருடங்கள் குழந்தை பாக்கியம் கிட்டவிலை எங்கள் தாம்பத்திய உறவில் இருவருக்கும் பூரண திருப்தி . அப்படி இருந்தும் எங்களுக்கு குழந்தை கிடைக்கவில்லை.

அன்று எங்கள் இருவருக்கும் விடுமுறை. வீட்டு தோட்டத்தில் இருந்து இருவரும் இயற்கையை ரசித்துக் கொண்டு இருந்தோம். தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தொங்கிய தூக்கனாங்குருவிக் கூடு
என் கவனத்தை ஈர்ந்தது . ஒரு குருவி தன் இரு குஞ்சுகளுக்கு இரை ஊட்டும் காட்சி என் சிந்தனையைத் உசிப்பி விட்டது . அந்தக் கூடு காற்றில் ஆடியபோது தொட்டில் ஆடுவது போல் எனக்கு தோன்றியது என்ன அழகான கூட்டின் அமைப்பு. இதை ஒரு உதவியும் இன்றி கட்ட இந்தக் குருவி ஜோடிகளுக்கு எவ்வளவு காலம் எடுத்திருக்கும் அந்த குருவிகள் இரண்டும் தங்கள் குஞ்சுகளுக்கு அன்புடன் உணவு கொடுக்கும் காட்சியை ரமணனுக்கு காட்டி நான் ரசித்தேன்

“.இப்படி எப்போ நாம் இருவரும் எங்கள் குழந்தை களுக்கு உணவு ஊட்டி மகிழ்வோம்” என்றது என் மனம் என் சிந்தனையில் அம்மா சொன்னது உண்மையாக இருக்குமோ என யோசித்தேன் அப்போது தோட்டத்தில் இருந்த சிறு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க இரணடு சிட்டுக் குருவிகள் தங்களின் குடும்பத்தோடு பறந்து வந்து, நீரில் மூழ்கி குளித்த காட்சியும் என்னை கவர்ந்தது மரத்தில் தொங்கிய தூக்கணாங் குருவிக்கூட்டின் அமைப்பு என்னை பிரமிக்க வைத்தது. ரமணனுக்கு அதை சுட்டிக் காட்டினேன்:

“ ரமணா உமக்கு கட்டிட்டக் கலையை படித்து பட்டம் பெற நான்கு வருஷங்கள் எடுத்தது. இந்தக் குருவிக்கு இந்த அழகிய கூட்டை தன் குடும்பத்தோடு கட்டி வாழும் கலையை கற்றுக் கொடுத்தது யார் “?

“வசந்தி இது இயற்கை அன்னை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த கலை . ஒவ்வொரு பறவையும் வித்தியயாசாமாக தமக்குத் தெரிந்த முறையில் கூடு கட்டும். குயில் போன்ற பறவைக்கு கூடு கட்டத் தெரியாது. காகம் கஷ்டப் பட்டு கட்டிய கூட்டில் களவாகப் போய் முட்டை இடும். பலவித குருவிக் கூடுகளையும், தேன் கூட்டையும் பார்த்து நாம் எமது கட்டிடக் கலையை கற்றோம்:

“அதோ பாருங்கள் ரமணன்அந்த தூக்கனாங்குருவிக் கூட்டை. அதை பார்க்க எனக்கு பொறாமையாக இருக்கு குருவி தான் பிடித்த புழுக்களைக் கொண்டு வந்து தன் குஞ்சுகளுக்கு ஊட்டும்அழகை . இதற்கு முன் இந்த குருவி இரண்டுதடவை குஞ்சு பொரித்து அவை வளர்ந்து பறந்து போயிற்று . இது இரண்டாம் பிரசவம் . இந்த குருவியின் குடும்பம் பெருகிறது. எவ்வளவு அழகான காட்சி பார்ப்பதற்கு. ம்.. ம் கொடுத்து வைக்க வேண்டும் என்று பெருமுச்சு விட்டாள் வசந்தி

“ஏன் இந்த பெருமுச்சு வசந்தி “?

“இல்லை ரமணன எங்களுக்கு திருமாணமாகி சுமார் ஐந்து வருடங்களாகி விட்டது என் வயற்றில் ஒரு குழந்தையும் வளரவில்லை. ஊரில் மலடி என்ற பெயர் மட்டும் எனக்கு காத்துக் கொண்டு இருக்குது. என் அம்மா என் ஜாதகம் பார்த்து சொன்னது உண்மையாக இருக்குமோ”?

“என்ன விசர் கதை பேசுகிறீர்? உமக்கு குழந்தைகள் அவசியம் வேண்டும் என்றால் என் நண்பர் டாக்டர் முரளியிடம் போய் ஆலோசனை கேட்போம் . இந்த காலத்தில் குழந்தை இல்லாதவர்களின் கவலையை தீர்க்க பல வழிகள் உண்டு. டாக்டர் முரளி பிள்ளை பேறு வைத்தியத்தில் நிபுணர் . அவரை நாம் இருவரும் சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற ஒரு திகதி எடுக்கவா வசந்தி “? ரமணன் கேட்டான்.
வசந்தி சம்மதித்தாள்

****

“:என்ன வசந்தி திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு பின் குழந்தை வேண்டும் என்று என்ன அப்படி திடீர் ஆசை உமக்கு வந்தது ” டாக்டர் முரளி வசந்தியை கேட்டார்.
வசந்தி வெட்கத்தில் பதில் சொல்லாமல் ரமணனின் முகத்தைப் பார்த்தாள்
“டாக்டர் எல்லாமே எங்கள் வீட்டுத் தொட்டதில் உள்ள தூக்கனாங்குருவிக் கூட்டில் தாய் பறவை தன் இரு குஞ்சுகளுக்கு இரை ஊட்டி கொஞ்சுவதை கண்டு வசந்திக்கும் அந்த ஆசை வந்து விட்டது”

“ ஓஹோ அதுவா கதை . இப்ப வசந்திக்கு எத்தனை வயது”?:
“முப்பது டாக்டர்”
”ரமணன் உமக்கு எத்தனை வயசு”?

“முப்பத்தி மூன்று முரளி”

“சரியான வயது தான் . கரு தரிக்க பல முறைகள் உண்டு . ரமணன் உமது விந்துவை பாவித்து வாடகை தாய் மூலம் உமது மரபணுவுள்ள குழந்தை பெறலாம் குழந்தை உங்களுக்கு சொந்தம் . அனால் அதிக செலவாகும் “

“அது வேண்டாம் டாக்டர் வேறு ஒருவரின் விந்துவையும் எனது கருப்பையுக்குள் நான் ஏற்க மாட்டேன். டாக்டர் என் ரமணனின் விந்து மூலம் என் கருப்பையில் குழந்தை உருவாக வேண்டும். அந்த குழந்தை எங்கள் இருவரினதும் மரபணுக்களை கொண்டதாக இருக்க வேண்டும்

“அப்படியா உங்கள் இருவரின் விருப்பம்? . உடலுறவு இல்லமல் இந்த முறையை பாவித்து குழந்தையை பெறலாம் இப்பொது இந்த முறை பாவித்து பல் தம்பதிகள் குழந்தை பெற்றுள்ளார்கள். இதை இண்டர்பெர்டெய்ன் மருந்தகம் (IUI). விந்தணு செல்கள் நேரடியாக உங்கள் கருப்பையில் பெண்னின் கருவில் முட்டை வெளி வரும்போது ஒரூ சில நிடத்தில் உங்கள் கணவனின் விந்து செருகப்படுகின்றன ஆங்கிலத்தில் இதை Intrauterine insemination (IUI) என்று சொல்வார்கள். .
ரமணின் விந்துவை சுத்தப்படுத்தி தெரிவு செய்து உமது கருப்பைக்கு செலுத்தி குழந்தையை உமது கருப்பையில் உருவாக்கலாம். இது ஆனேகமாக நூற்றுக்கு தொன்நூறு விசிதம் வெற்றி தரும் ‘ஒரு சிறு நிமிட சிகிச்சை .பெண்ணுக்கு நோவிருக்காது”

வசந்தி ரமணனை பார்த்தாள்.

“வசந்தி இது நீர் எடுக்கும் முடிவு” : என்றான் ரமணன்

வசந்தி டாக்டர் முரளி சொன்ன முறைக்கு சம்மதம் தெரிவித்தாள்
அந்த முறையை செயல் படுத்த வசந்தி ரமணன் ஆகிய இருவரிடமும்
சட்டப் படி தேவையான ஒப்புதலை டாக்டர் முரளி சிகிச்சை செய்ய பெற்றார் . அனைத் சிகிச்சையை அவரின் கிளினிக்கில் வசதி
இருந்தது
“ டாக்டர் ஒரு கேள்வி உங்களை கேட்க்கலா”?
“தாராளமாக கேட்கலாம்’’
“இது வெற்றிபெறும் விகிதம் எவ்வளவு “?.
அது உங்கள் இருவரது உடல் நிலையையும் பொருத்தது . அதோடு அதோடு ரமணனின் விந்துவின் வின் வேகத்தையும் சக்தியையும் பொருத்தது” டாக்டர் முரளி சொன்னார்.
“எத்தனை பேருக்கு இந்த சிகிச்சை வெற்ற்றிகர்மமாக செய்து இருக்குறீர்கள்.
உங்களின் சிகிச்சை மீது நம்பிக்கை எனக்கு இல்லை என்பதில்லை .என் மனதில் வந்த கேள்வி இது குறை நினைக்கவேண்டாம் டாக்டர் “ வசந்தி சிரித்தபடி சொன்னாள்
இதுவரை முப்பது பேருக்கு நான் இந்த சிகிச்சை செய்து எல்லோருக்கும் குழந்தை பிறந்திருக்கு. பயம்வேண்டாம். எதையும் நேர்மறையாக சிந்தியுங்கள் உங்கள் இருவருக்கும் குழந்தை நிட்சயம் கிடைக்கும் இந்த சிகிச்சைக்கு முன் உங்கள் இருவரிலும் சில பரிசோதனைகளை நான் செய்ய வேண்டும். சம்மதமா”?
இருவரும் சம்மதம் தெரிவித்தனர்

****

சிகிச்சசை நடந்து இரு மாதங்களுக்குப் பின் வசந்தி கருவுற்றாள் வசந்தி தாயுக்கு செய்தி சொன்ன போது,
“ பார்த்தியா வசந்தி ரமணனின் ஜாதகத்தில் குழந்தை பொருத்தம் நிட்சயம் இருக்கிறது அதனால் தான் உனக்கு பிள்ளை கிடைக் இருக்கிறது.

“ ஆமாம் அம்மா . உனக்கும் அப்பாவுக்கும் பேரனோ பேத்தியோ இன்னும் சில மாதங்களில் கிடைக்கப் போகுது இதையிட்டு சந்தோசப் படு “என்றாள் வசந்தி.
அவளது மனம் வீட்டுத் தோட்டத்தில் தொங்கும் தூக்கனாங்குருவிக் கூட்டுக்கு நன்றி தெரிவித்தது

யாவும் புனைவு

எழுதியவர் : பொன் குலேந்திரன் (கனடா) (14-Jan-19, 5:43 pm)
பார்வை : 159
மேலே