கிராமத்து பொங்கல்

பிய்ந்து போன உடம்பெல்லாம் சரி செய்து வெண்மையாய் சிரிக்கும் மண்சுவரு...

வருடம் ஒருமுறை தன்கடமையை செய்துவிட்டு மகிழும் சுண்ணாம்பு பாணை

வானவில் எட்டிப்பார்க்கும்
வண்ண கோலம்...

இடுப்பில் இருப்பதை விட எடுப்பாய்
பொங்கல் கல்லில் மஞ்சள் தலைப்பாகையோடு மண் பாணை

பாதி காய்ந்தாலும் பற பறவென எரிந்து பொங்கல் பாயசம் பரிசாய் கொடுக்கும் பனை ஓலை..

ஆரவாரமான குலவையின் ஆனந்தத்தில்பொங்கி வழியும் பொங்கல் பால்

பொங்கல் பூ அலங்காரத்தோடு அணிவகுப்பு நடத்தும் காய்கறி கூட்ட படையல்

திருடி திங்கும் காக்கை படையல் உணவை கூட ஏளனமாய் பார்க்கும் எங்கள் திருநாள்...

இயற்கையோடு இணைந்த எங்கள் கிராமத்து பொங்கல் திருநாள்...

எழுதியவர் : வேல் தங்கம் (15-Jan-19, 6:30 am)
சேர்த்தது : வேல்ராஜ் R
Tanglish : iyarkai pongal
பார்வை : 207

மேலே