பொங்கல் வாழ்த்து
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...!
நிலத்தி லுழைத்துப் பயிர்வளர்த்தே
நெல்தரும் உழவரை வாழ்த்திடுவோம்,
நலம்பெற உழுத மாட்டினையும்
நன்றி யுடனே வாழ்த்திடுவோம்,
வலம்வரும் கதிரினை வணங்கியேதான்
வாசலில் பொங்கல் வைத்திடுவோம்,
உலகி லனைவரும் நலம்பெறவே
உவந்தே பொங்கலில் வாழ்த்துவோமே...!
செண்பக ஜெகதீசன்...