உழவனின் பெருமை

பெறுதலில் கிட்டா பேரின்பம் ,உழுது ஈந்தலில் உண்டே
உணர்வும் செயலும் ஒன்றா ,மனமொவ்வா வாழ்வினிலுண்டோ?இன்பம்
மார்தட்டி முரசறைந்து எட்டுத் திக்கும் செவிகள் அதிர்ந்திட
நாம் உழவனென்று பறையுங்கள் அதனினும் பெருமை வேறுண்டோ!

ஏறுதூக்கி வீறுநடைபோட்டு ,வயக்காட்டு வரப்பில் தடம்பதிக்கும் வல்லவனே!
கார்கால வேளையிலே கதிரவனும் கண்ணுறங்க காலந்தவறா கண்ணியனே!
வானம் பொய்த்தாலும் மண்ணும் ஏய்த்தாலும் மனங்கலங்கா திண்ணியனே!
விண்ணியல் மண்ணியல் இணைத்தே உயிரியலை உயிர்ப்பிக்கும் புண்ணியனே!

பண்படா நிலமும் உன்பாதம் பட்டால் பொன்விளையும் பூமியே!
நெற்றிச் சுரப்புகள் ஊற்றியே,வயிற்றுச் சுரப்பைக் குறைப்பவனே!
அவனியில் வாழும் உயிரெல்லாம் தலைவணங்கும் தன்னிகரில்லாத் தலைவனே!
உன்னுடல் உனதல்ல,உன்னுயிர் உனதல்ல,உலகையாலும் உழவனே!

சுவாசமாய் நேசம் கொண்டு அணுதினமும் உழைக்கும் உழவனே!
உனக்கான மாயத் திரைகளெல்லாம் மறைந்தே மாற்றம் நிகழும்
மாற்றம் நிகழ்த்தும் மானுடம் மலரும் காலம் இதுவே!
எழுச்சி கொண்டு விழித்தோம்
ஏறுதூக்குபவன் ஏற்றம்காண எழுவோம்!

அனைவருக்கும் இனிய உழவர் தின நல்வாழ்த்துகள்

எழுதியவர் : (15-Jan-19, 10:11 am)
சேர்த்தது : கயல்
பார்வை : 105

மேலே