எந்நாளும் எனக்கு கடும் சினமுண்டு
இடர் படும் நிலையில் இருப்போர் யாவரும்
இயலா நிலையில் இருப்பதைக் கண்டால்
கரும் விழி இரண்டில் கடும் பசி உண்டு
காணும் நிகழ்வுகளில் ஏழ்மையைக் கண்டு
எந்நாளும் எனக்கு கடும் சினமுண்டு
சிந்தனை செறிவுள்ள அறிஞனின் வாக்கின்
தரம் மிக்க சொல்தனை கேளா நிலையில்
செவிதனின் வாங்கா சிறுமதிக் கொண்ட
தரணி வாழும் மக்களின் அறிவினைக் கண்டு
எந்நாளும் எனக்கு கடும் சினமுண்டு
பாராளும் வேந்தன் பாவனையைக் கண்டு
பணியின்றி வாழும் பாமரார் யாவரும்
பச்சை மரம் போல் இருப்பதைக் கண்டு - அதனால்
பயங்கர நிலை அது எதிர்வர எண்ணி
எந்நாளும் எனக்கு கடும் சினமுண்டு
எல்லா வினையையும் எண்ணியதாலே
என் மனம் நிம்மதி இழந்தது உண்டு
என்றாலும் அதை நான் எடுத்தெரிந்து விட்டு
இந்நிலம் உய்யவும் எம் மக்கள் வாழவும்
என் சிந்தனை அதற்கு நல் உரந்தனையிட்டு
நல் எழுத்தினால் அதையும் செழிப்பாக்கினேன் இன்று.
- - நன்னாடன்