வீரப்பன்

இவன்
கண்ணி வைத்தான்
கன் வைத்திருந்தான்
எந்தக் கன்னி மீதும்
கண் வைத்ததில்லை

இவன்
வருகைக்காக காத்திருந்தது
நாட்டிலும் காட்டிலும்
விலங்கு
தமிழா இதை நீ
விளங்கு

சந்தனம் வெட்டிய
தனத்தை
அள்ளிக் கொடுத்து
குளிர்வித்தான் ஏழை
மனத்தை
வாழ வைத்தான்
தன் இனத்தை

இதனால்
அரசு போட்டது வலை
ஏழை வைத்தான்
அரிசி போட்டு உலை

நாட்டைத் தப்பாக்கி
வைத்தோரை
தன் துப்பாக்கி வைத்துத்
திருத்தினான்
இன்று ஓகேனக்கல்
கேட்போரை
ஓட ஓட துரத்தினான்

இவன்
உண்மையிலேயே
காட்டை வெட்டிய
வீர வன்னிய
காடுவெட்டி குரு

கடத்தல் திட்டமிடும் இவன் மூளை
கடத்திவிட்டு அனுப்புவான் ஓலை
சொன்னபடி நடத்தல் இவன் வேலை

இவன் மீசை வைத்தக் காளை
இவன் குலப் பெண்கள் மீது
ஆசை வைத்தால்
வெட்டுவான் காலை

இவனின்
வீரம்
இவனைப்
பிடிக்க வருவோர்
நெஞ்சைத் துளைத்து
ஆக்கியது ஈரம்

காட்டில் மன்னனாக
ஆண்டவனை
தமிழ் மண்ணைக் காக்க
இன்னுயிர் பூண்டவனை
ஆண்டவன் வீழ்த்தாது
ஆண்டவர்கள் சதியால்
வீழ்த்தினர்

இவன் தீரத்தை
மக்கள் சாதியால்
வாழ்த்தினர்

எழுதியவர் : குமார் (20-Jan-19, 11:40 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 1905

மேலே