வண்ணத்துப்பூச்சி

சாம்பசிவம் ( சிவம்) ஒரு தீவிர சிவபக்தர் . பல சொத்துகளுக்கு அதிபதி. அவரது தந்தை நல்லசிவம் பிரிட்டிஷ் காலத்தில் முதலியார் பட்டம் பெற்றவர். சிவம் உயர் சாதி என்பதால், சாதி சனம் பார்ப்பவர். .சிவம் தினமும் சண்டிலிப்பாய் ஊரில் உள்ள சிவன் கோயிலுக்கு பொய் வருவார்ர. அக்கோவிலின் தர்ம கர்த்தாவும் கூட சொத்துக்காகவும், சாதிக்காகவும் தன் அந்தஸ்த்தை உயர்த்தவும், உறவுக்குள் சிவகாமியை மணந்தவர். அவரின் மனைவி சரியாக அனுசாரம் பார்ப்பவள். எல்லா விரதங்களுக்கும் பிடிப்பவள் .

சாம்பசிவம் தம்பதிகள் தவம் இருந்து பெற்ற ஒரே மகன் சிவராஜா. வீட்டுக்கும், ஊருக்கும் அவன் ராஜா. .அவன் கேட்டதெல்லாம் அவனுக்குக் கிடைத்தது. ராஜாவுக்கு பெண்கள் என்றால் ஒரு சபலம் ஆனாலும் படிப்பில் விண்ணன் . சாம்பசிவம் தன் மகன் அரசில் உயர் அதிகாரியாவான் என்று அவன் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தார். தன் மனைவியின் தம்பி சிவநேசனின் மகள் லலிதாவை நிட்சயத்து இருந்தார். சிவநேசன் ஒரு டாக்டர். செல்வந்தர் . அதோடு சாம்பசிவத்தை போல் சிவபக்தர்.
சாம்பசிவத்தின் மகன் சிவராசா யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது அவனோடு கூடப் படித்த அன்ஜெலா சூசைப்பிள்ளை மீது ராசாவின் பார்வை விழுந்தது . இளவாளையில் உள்ள ஒருகத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த அவள் தீவீர கத்தோலிக்கப் பெண். ராஜாவும் அன்ஜெலாவும் படித்து பட்டம் பெற்றபின் இலங்கை பரிபாலன சேவையில் சித்தியடைந்து, யாழ்ப்பாணக் கச்சேரியில் அவர்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது . அவர்கள் காதல் தொடர்ந்தது. தன் காதலை அன்ஜெலாவுக்கு ராஜா வெளியிட்டப்போது அவள் தான் மதம் மாற முடியாது. அனால் ராஜா கத்தொலிக்கனாக மாறினால் தான் அவனை திருமணம் செய்ய சம்மதம் என்றாள் . ராஜாவுக்கு அவள் மேல் இருந்த காதல் பெற்றோருக்கு தெரியாமல் மதம் மாற வைத்தது. அவன் மதம் மாறிய பின் தன் பெயரை சார்ல்ஸ் ராஜ் என்று மாற்றினான்.

திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை . டாக்டரிடம் போய் பரிசோதித்து பார்த்தபோது அன்ஜெலாவுக்கு கருப்பையில் பிரச்சனை என்றும், அவள் கருத்தரிக்க முடியாது என சார்ல்ஸ் அறிந்தான் . அவர்களுக்கு இடையே குடும்பப் பிரச்சனைகள் ஆரம்பமாயிற்று, அதே நேரம் சார்ல்ஸ் கண்டி கச்சேரிக்கு மாற்றலாகிச் சென்றான்.
கண்டி கச்சேரியில் நல்ல பதவியில் மனைவியைப் பிரிந்து தனிமையில் இருந்த சார்ல்சுக்கு ஒரே இலாக்காவில் வேலை செய்த சந்திரிக்கா என்ற கண்டி நாயக்கர் வம்சத்தை சேர்ந்த பெண்ணின் தொடர்பு கிடைத்தது . சந்திரிகாவின் அழகில் சார்ள்ஸ் மயங்கினான் . அன்ஜெலாவை படிப்படியாக மறந்தான் அன்ஜெலாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்தான் அவளிடம் இருந்த அவளின் குறையைக் காட்டி விவாகரத்து செய்தான். அவளும் அவனோடு வாழ முடியாமல் சம்மதித்தாள்.

விவாகரத்து செய்து சில மாதங்களில் சந்திரிகாவை திருமணம் செய்து பெளத்த மாதத்துக்கு ராஜா மாறினான் தன் பெயரை ராஜசிங்காவாக மாற்றினான். காலப் போக்கில் சந்திரிகாவுக்கும் அவளோடு படித்த பசனாயக்கா என்பவனுக்கும் தொடர்பு இருந்ததை அறிந்து அவளையும் இரு வருடங்களில் ராஜா விவாகரத்து செய்தான் . அதோடு கண்டியில் இருக்க பிடிக்காமல் கொழும்புக்கு மாற்றலாகி சென்றான்..

கொழும்பில் சில மாதங்கள் தனித்து வாழ்ந்தான். ஒரு பெண்ணின் உறவு இல்லாமல் அவனால் இருக்க முடியவில்லை தனக்கு ஒரு துணையைத் தேடினான். அவன் தெஹிவலையில் தங்கி இருந்தது வான்டுவேஸ்ட் என்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் வீட்டில். பறங்கியரான அவருக்கு இரு மகள்கள். ரோசி மூத்தவள். கூச்சம் இன்றி அனைவரோடும் சிரித்து பழகுவாள் . . ஹோட்டல் ஒன்றில் இசைக்குழுவில் பாடி நடனம் ஆடுவாள். குடிகாரி. அவளின் வேண்டுகொளின் படி அடிக்கடிஅவள் வேலை செய்த ஹோட்டலுக்கு ராஜா போய் வரத் தொடங்கினான். ராசாவுக்கு ஒரு பெண்ணின் நட்பு அவசியம் தேவைப் பட்டது . சொந்த ஊரான சண்டிலிப்பாயுக்குப் போய் மச்சாள் லலிதாவை திருமணம் செய்ய முடியாத நிலை அவனுக்கு . லலிதா சற்று நிறம் குறைந்தவள் சிரித்து பழக மாட்டாள். கொழும்பில் தனித்துப் போன ராஜா, வண்டுபோல் இன்னொரு மலரான ரோசி மேல் தாவினான். ரோசி ஒரு அங்கிலிக்கன் மதத்தவள் . ராஜா மதம் மாறி . ரோசியைத் திருமணம் செய்தான். ஆனால் பல காலம் அவளோடு அவன் வாழவில்லை. ஆரம்பத்தில் ரோசின் குணம் ராஜாவுக்குத் தெரியவில்லை. ரோசி படு மோசமான குடிகாரி என நாளடவில் அறிந்தான் ரோசிக்கு பிறர் ஆடவர்களோடு தொடர்பு இருப்பதை அறிந்தது அவளையும் ராஜா விவகரத்து செய்தான். . கொழும்பில் இருக்கப் பிடிக்காமல் கொழும்பில் இருந்து மாற்றலாகி காலி கச்சேரிக்கு சென்றான்.

விதி ராஜாவை விடவில்லை . மூன்று தடவை மதம் மாறி விவவாகரத்து செய்து நான்காம் மனவியைத் தேடி காலி சென்றான். காலி கச்சசேரியில் ராஜாவின் கீழ் வேலை செய்த இருபத்தைந்து வயது ஜெசீமா என்ற முஸ்லீம் பெண்னின் மேல் அவன் பார்வை விழுந்தது. ஜெசீமாவின் தந்தை பேருவளையில் மாணிக்கக் கல் வியாபாரி ஜெசீமா அமைதியான போக்குள்ளவள். தினமும் தொழுவாள் ஜெசீமா ருஹுனு பல்கலை கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவள். ராஜாவின் போக்கினை பற்றி பல வதந்திகள் ஜெசீமா கேள்விப்பட்டாள் . ஜெசீமா. அப்படி இருந்தும் ராஜா முஸ்லீமாக மாறினால் தான் அவனை தன தந்தையின் அனுமதியோடு திருமணம் செய்யவாதக சொன்னாள். ராஜாவும் நாலாம் தடவை மதம் மாறி தன் பெயரை ரஷீத் என்ற மாற்ற முடிவு எடுத்தான். தன் முடிவை ஜெசீமாவுக்கு சொல்ல முடிவு எடுத்த தினம் அவனுக்கு பதிவு தபாலில் ஒரு கடிதம் வந்தது அதை பிரித்து பார்த்த போது அக்கடிதம் தன் தந்தை சாம்பசிவத்திடம், இருந்து வந்த கடிதம் என் அறிய அவனுக்கு வெகு நேரம் எடுக்கவில்லை கடிதத்தைப்பிரித்து எடுத்து வாசித்தான்
ராஜா
ஒரு நல்ல உயர் சாதியில் அந்தஸ்து உள்ள சைவ
குடும்பத்தில் பிறந்த நீ பல தடவை ஒரு பெண்ணின் உறவுக்காக மதம் மாறினாய் என் அறிந்தேன். இந்த சண்டிலிப்பாயே உன் செயலை பார்த்து சிரிக்குது இந்த கடிதத்தை கண்டாவது நீ திருந்தி வாழ்வாயா ?
சைவ சமயத்தில் பிறந்த நீ பெண்ணின் உறவுககாக பல தடவை மதம் மாறி உன் பெயரை மாற்றி இருகிறாய். இது எல்லாம் உன் உடலின் தேவையை பூர்த்தி செய்ய உனக்குத் தேவைப் பட்டது. உனக்கு உன் இச்சையை பூர்த்தி செய்ய ஒரு பெண் தேவைபட்டது அவள் எந்த மதமானலும் உனக்கு பறவாயில்லை . ஒவ்வொரு தடவையும் நீ திருமணம் செய்து குடும்பம் நடத்தியது சில வருடங்களே., உன் வாழ்வு வண்ணத்துப் பூச்சி போன்றது. அதுக்கும் சொற்ப காலம் தான் வாழ்வு. அப்படி பல தடவை திருமணம் செய்தும் உனக்குஒரு குழந்தை கூட பிறக்கவில்லை . உனக்காக காத்திருந்த உன் மாமன் மகளின் வாழ்க்கையை சீரழித்துவிட்டாய் . உன்னை இனி நாங்கள் எங்களின் மகனாய் ஏற்றுக் கொள்ள மாட்டோம் . நீ எங்கள் உடலுக்கு கொள்ளி வைக்க ஊருக்கு வரத்தேவை இல்லை எங்களின் இருவரதும் உடல்களை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானம் செய்து விட்டோம். எங்கள் சொத்தில் அரைவாசி ஊர் சிவன் கோவிலுக்கும், ,மிகுதி வைத்திய ஆராய்ச்சிக்கும் உயில் எழுதி வைத்துவிட்டோம் . இது எங்கள் முடிவு. எங்களை பார்க்க நீ வர வேண்டாம் எங்கள் முகத்தில் கூட நீ முழிக்க வேண்டாம் :
இப்படிக்கு உன் பெற்றோர் இல்லாத
சாதாசிவமும் சிவகாமியும்

கடிதத்தை இரு தடவை வாசித்த ராஜா அவன் இருந்த கதிரையில் .பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கிப் போனான் கடிதம் கையில் இருந்து நழுவி நிலத்தில் விழுந்தது. .
தூரத்தில் கோவில் மணி ஓசை கேட்டது

****
(யாவும் புனைவு)

எழுதியவர் : பொன் குலேந்திரன் (கனடா) (22-Jan-19, 9:58 am)
பார்வை : 260

மேலே