முக்கூடல்
முன்னிரவு வேளை, இருளைக்
கிழித்து வந்த வெண்ணிலவு
நீல வானைத் தெளிவு படுத்த
வானில் ஏற்றிவைத்த கார்த்திகை
அகல்கள்போல் சிமிட்டிடும் தாரகைகள்
இதோ நிலவும் பவனி வருது வானில்
காத்திருந்த என்னைக் காண
அவளும் வந்தாள், மண்ணில்
பவனிவரும் மண்ணிலவாய்-இப்போது
பொங்கிவரும் இயற்கையின் அழகு
தோட்டத்தில், நான், அவள் , வான் நிலா
இதம் தரும் இந்த சந்திப்பை
முக்கூடல் என்பேன் நான்.