வருட இறுதி
அந்தி மஞ்சல்வெய்யில் மாலை
சினுங்கி அழும்
குழந்தை மழை
தற்காலிக
பிரிவை சுமந்துகொண்டு
அடித்து பிடித்து
இடம்பிடிக்கும் அவசர பயணிகள்
கைகாட்டி
வழியனுப்பிய பயணம்
கடைசி யன்னலோரம்
தூவானம் சிந்திய
அவளுக்கான கண்ணீர்
சரிந்த முந்தானையில்
எழுந்த பெருமூச்சு
விலத்தி
பார்க்க மனமில்லாமல்
வீசும் குளிர்காற்று
துக்கம்
வெம்பி வெடிக்க
துடிதுடித்து
அழும்மனசு
வெறுமையில்
என்னைப்போல்
பேரூந்து நிலையம்
இதைதவிர"""
கடந்துபோன
நாட்களை
ஞாபகப்படுத்த
வருட இறுதியின்
கடைசி நாள்ளில்
ஆழ்மனசுக்குள்
ஒன்றும் ஒட்டிக்கொள்ளவில்லை
ஆக்கம். லவன் டென்மார்க்