நினைக்க தெரிந்த மனமே
நினைக்க தெரிந்த மனமே
காதல் பூவின் நிறமே
கண்ணில் கலந்துவிடு
நெஞ்சில் நிறைந்துவிடு
காற்றின் சிறுதுளிகள்-என்
கண்களில் காதலாய் மாறியதே
வானில் பறவைகளும்-மழை
தருகின்ற மேகமாய் தோன்றியதே
இனம்புரியாத ஒருவகை காதல்
என்னுள் நீந்துதே...
என்தாயின் பாசம் நீதருவாயென
உன்னைத் தேடுதே...
வரப்பில் ஏறி நீவந்தால்
புற்கள் உன்னை தான் பார்க்கும்
உலக அழகி நீயென்று
சொல்லிக்கொண்டே சிரித்து நிற்கும்
வயலில் ஊரும் நண்டைபோல்-என்
இதயம் உன்னுள் தான் சுற்றும்
வெளியில் போக வழியின்றி-உன்
இதயத்திடம் வழிகேட்கும்
அடிபெண்ணே உன்சிரிப்பை-என்
மனதில் அடைப்பேனே-அதை
தினமும் ரசிப்பேனே...
கரைந்தோடும் என்வயதை-உன்
உயிரில் கரைப்பேனே-பின்
இளமையாய் பிறப்பேனே
தென்றல் சிரிப்பின் சத்தம்-நான்
உன்னுள் கேட்பேன் நித்தம்-என்
இரவில் சாயம் போனால்-உன்
கூந்தல் சாயம் கேட்கும்...
எந்தன் வயதின் பலவீனம்
காதல் நோயில் விழுந்தேனே
உன்னுடைய மடிமேலே
புதைந்து உயிரை துறந்தேனே
காணல் நீராய் என்காதல்
அருகில் வந்தால் கரைகிறதே
அதற்கு ஏதும் மருத்துவங்கள்
இதயம் கேட்டு அளைகிறதே
உன் நெற்றி வேர்வையிலே-நான்
தினமும் குளிப்பேனே-உன்
இதழில் துடைப்பேனே
மணல்போன்ற உன்மனதில்-நான்
கால்தடம் பதிப்பேனே-என்
இதயத்தை சிதைப்பேனே
மழைச்சாரல் போலநீயும்-என்
நெஞ்சில் வீசிச்சென்றாய்-அது
என்னவென்று கேட்டேன்-என்
பாசமென்று சொன்னாய்...