எந்த மொழியில் சொல்வேன்

ஓடையில் துள்ளும் மீன்களை
உன் விழிகள் என்றேன்
ஆடையை தழுவிடும் தென்றலை
ஆல்ப்ஸின் பனி என்பேன்
கூந்தலில் நீ சூடாத முல்லையை
உன் புன்னகை இதழ்களில் கண்டேன்
உவமை சொல்ல முடியாத
உள்ளத்தில் நீ மறைத்து வைத்திருக்கும் அந்த மௌனத்தை
எந்த மொழியில் சொல்வேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jan-19, 10:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2541

மேலே