காதல்

காதலும் இயற்கை சீற்றமே
இயற்பெயர் கூற்றமே (கூற்றம்-எமன்)
இறைவனின் வினையே
இழுபறி நிலையே
மாபெருங் கலையே
மகப்பேறு நிலையே
எரிமலையை எரிய விட்டு
வான்மழையும் பொழிய விடும்
தோகையையும் கட்டி விட்டு
தலையையும் வெட்டி விடும்
நெஞ்சம் இன்பத்தை குறிவைத்து
இயற்கை எய்தி விடும்
பெருங்காதல் செய்தல் விதி
பெருங்கடலில் விழுந்த கதி......

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (24-Jan-19, 6:07 pm)
சேர்த்தது : கைப்புள்ள
Tanglish : kaadhal
பார்வை : 71

மேலே