கற்பியல்

கண்ணும் கருத்துமாய் உன்னை காதலிக்கிறேன்,
எண்ணும் எழுத்துமாய் நீ கற்றுக் கொடுக்கிறாய்.
கட்டி அணைத்திட பக்கம் வந்தால் கையை விரிக்கிறாய்,
முத்தம் கொடுக்கும் எண்ணம் வந்தால் முறைத்துப் பார்க்கிறாய்,
கண்ணைத் தாண்டி கண்கள் எங்கும் சென்றால்
கையும் களவுமாய் கண்டு பிடிக்கிறாய்!!!
வேறு ஒரு பெண்ணை பார்த்தாலும் கண்ணீர் வடிக்கிறாய்!!!!
உன்னை விட்டுக்கொடுத்து விடுவேனா??
காதல் பட்டுப் போக விடுவேனா??

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (24-Jan-19, 6:13 pm)
சேர்த்தது : கைப்புள்ள
பார்வை : 45

மேலே