அதிர்ஷ்டமா .. சாபமா ..

வண்டின் காலைப்பிடித்து
அதில் மகரந்தம் தடவி
மணம் நிரப்பி
தம் முத்தம்களை தூரத்தில் இருந்தே
பரிமாறிக்கொண்ட
இரு மலர்களை பறித்து - அவை
இருவரையும் கட்டி அணைக்க வைத்து
ஒன்று சேர்த்து அடுக்கி
பூக்கொத்தாய் புதிய பரிணாமம் எடுப்பது ....
பூக்களின் சாபமா .. அதிஸ்டமா..
புரியவில்லை....
நேற்று காதல் தோல்வியில்
தற்கொலை செய்த ஒரு காதல் ஜோடியின்
நோக்கம்....

எழுதியவர் : Natheer Sheriff (28-Jul-10, 3:12 pm)
சேர்த்தது : natheer sheriff
பார்வை : 820

மேலே