நீ நான்
தித்திப்பான வார்த்தை பேசியவளே
திக்கற்றவனாக மாற்றினாயோ என்னை
தித்திப்பான வார்த்தை பேசி....
திகட்டாத இன்பமென்று
திகைப்பையூட்டி
திணற திணற...
தித்திப்பான அன்பை பொழிந்தவளே...
திசை தொலைத்து நிற்கும் என்னை
திசை காட்டியாய் மாற்றிடுவாயோ - உன்
திசை காட்டியாய் மாற்றிடுவாயா...?
திகைத்து தான் நிற்கின்றேன்
தீபமாய் ஒளிர்ந்த நின் ஒளி
தீப்பந்தமாய் என் வாழ்வினை கௌவியதால்
திகைத்து தான் நிற்கின்றேன்....