எவன் அப்பிடிச் சொன்னவன்
என்ன பாட்டி யாரையோ கண்டபடி திட்டிட்டு இருக்கிற?
@@@@
நான் என்னத்தச் சொல்ல? தமிழ்த் தெரியாத ஒரு பையன் வந்தான். நீ யாருடான்னு கேட்டேன்.
@@@@
அவன் என்ன சொன்னான்?
@@@@@
அவன் என்னப் பாத்து என்னவோ சொல்லி என்னப் பாத்து 'சாகு'ன்னு சொன்னான்டா, நாசமாப் போறவன்.
@@@@
அவன் எப்படி இருந்தான்?
#@@#
கருப்பா, கட்டடவேலை செய்யறவன் மாதிரி இருந்தான்டா முனியாண்டி.
@@@@
ஊருக்கு வெளியே ஒரு தொழில்சாலை கட்டிட்டு இருக்கிறாங்க. அங்க வேலை செய்யற பையனா இருப்பான். உன்னச் சாகச் சொன்னவனைக் கண்டுபிடிச்சு அவந் தோலை உரிச்சு உப்புக் கண்டம் போடறேன் பாட்டி. நீ கவலைப்படாதே. எம் பாட்டியைச் சாகச் சொன்னவன நான் சும்மாவிடப் போறதில்லை.
■■■■■■■■■■■■◆◆◆◆◆■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Sahu=Victorious strong