சந்தக் கலிவிருத்தம்

இருள்வேளையில் விரிவானதி லெழிலோவியம் போலே
வருவாளவள் முகில்மூடிட மறைவாள்விளை யாட்டாய்!
உருமாறினு மொளியாலவ ளுலகோருள மீர்ப்பாள்!
மெருகேறிட வழகாய்முழு மதியாள்விரை வாளே!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Jan-19, 2:21 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 76

மேலே