மன்னிப்பு
உன் மீது கொண்ட
இனம்புரியாத காதலாலே,
உன் சிறு சிறு தவறைக் கூட
பெரிதாய் உணர்கிறேனடி அன்பே...
என் செய்வேன் !
எல்லாமே நீ மட்டும்தானென
அசையா காதல்
என் உயிரில் ஊறிவிட்டதடி அன்பே.....
உலகமே சுகமென வாழ்ந்தேன்
உன் கரம் பற்றும் வரை,
நீ மட்டுமே உலகமென வாழ்கிறேன்
உன் கரம் பற்றியவரை....
என் அன்பு முழுவதையும்
உன்னிடம் மட்டும் புதைக்கவே
என் உயிர் ஊசலாடுகிறது அன்பே.....
தவறுகள் வாழ்வுடன்
பிண்னி பிணைந்ததுதான்
அதை அவ்வப்போது செய்திடின்
பெரிதாய் உணரபடுவதில்லை,
தொடராகும் போதுதான்
பெரிதாய் உணர்த்தப்படுகிறது
அன்பே....
என் முட்டாள்தனமான
அட்வாஞ்சை தவிர்த்து,
உனகேற்றாப் போலவே
வளைந்து நெளிந்து
உன்னை மகிழ்விக்கும்
பொருத்தமான மணவாளனாக
வாழ்கிறேன் அன்பே ....
என் குறைகளை மன்னித்து,
ஏற்றமுள்ள கணவனாக என்னை
உன் உள்ளத்தில் பதித்திடு
அன்பே....