கடல் கடந்த பயணம்

அயல் நாட்டில்
அயலவர்களின்றியும் ,
அரவணைப்பின்றியும்,
கடந்து செல்கிறது எம் வாழ்வு...

மன வலிமை போல
உறவுகளுக்கு- வெளிக்காட்டி,
எம் உளக்குமுறுறல்களை
எம்முள்ளே வைத்து புதைத்து
விடுகிறோம் ....

எம் துயரங்களை
உறவுகளுக்கு சொல்வதால்
உடைந்து விடுவார்களோ !
என அஞ்சி,
அவர்களின் சுகங்களை கேட்டறிந்து
அதில் இன்பம் அடைந்தே
செல்கிறது எம் நாட்கள்....

நாம் வயிறுபுடைக்க உண்டு
உறங்க சென்ற காலம் மாறி,
விழித்திருந்தால் பசிக்குமே-என ,
நேர கால உறக்கப் பழக்கம் இன்று ....

சுவையான உணவை
சுவைத்து உண்ட
காலம் கடந்து,
வயிற்றை நிறைத்தாலே
போதுமென்ற காலத்தில் நாம்...

குளிர் கால சோதனையும்,
வெயில் கால வேதனையும்,
வேண்டாமென்றாலும்,
அனுபவித்தேயாக வேண்டுமென்ற,
நிர்ப்பந்த சூழ்நிலையில்
இன்று நாம்....

உறவுகளுடன் அலைபேசியில்
உரையாடும் அவ் சில மணி நேர
சந்தோசங்களும் சில சமயங்களில்
பூரணமின்றி கசப்பான
குழப்பங்களால்
பாதியும் மீதியுமாக முடிகிறது..

பொழுது விடிந்தால் வேலை,
சாய்ந்தால் தங்குமிடம் என,
எம் வாழ்க்கைச் சக்கரம்
சுருண்டு ஒடுங்கிக் கிடக்கின்றது ....

தனிமைப் பறவையாய்
தாயகமிருந்து
பறந்து வந்தோம் ,
எம் தாகங்களை
தனித்திடு இறைவா ....

எழுதியவர் : பொத்துவில் அஷ்ரப் (27-Jan-19, 2:18 pm)
சேர்த்தது : Mohammed Ashraf
பார்வை : 240

மேலே