மார்லின் மன்றோ
மயக்கும் கண்கள்..
மாயப் புன்னகை
கவர்ந்திலுக்கும் உடலைமைப்பு
காமதேவனின் கைவனப்பு...
ஆடவரின் மானசீக காதலி..
எத்தனையோ பட்டங்கள்....?
ஏதும் உணராமலே...
தந்தை யார்..?
தேடலினாலேயே...
ஆடவரை நாடினாயோ...?
அரவணைப்பு தேடிய உன் இதயம்...
அணைக்க துடிக்கும் ஆடவர் இதயம்...
யார் வென்றது...?
வளர்த்தவன் என்று நம்பிட....
எட்டு அகவையிலே
இரையாக்கினானே...- அவன்
உடல் பசிக்கு...
எத்தனையோ கலைகள்
அத்தனையும் தஞ்சம் புக...
அனைத்திலும் அரசியானாய்...
ஏனோ புரியவில்லை..
ஏனோ தெரியவில்லை...
உன் வதனத்தை தவிர....
உன் இலக்கிய தாகம்
இலக்கணப் பிழையாக...
இரவு ஓய்வு கொடுக்க மறுக்க..
மாதுவான உனக்கு...
மதுவே துணையாச்சோ...?
மதுவின் மிதமிஞ்சிய அன்பே..
மனச்சிதைவின் கருவாச்சோ...?
தந்தையை தேடிய கனவு..
கனவாகிப் போய்விட...
கருச்சிதைவால் கலங்கிப்போனாயோ...?
தலையில் கீரிடம் சூடா இளவரசியாய்...
இளம் குருத்தாய்..
இளமையில் மடிந்தாயோ..?
இளமையை கொண்டாடிய...
இவ்வினம் இயன்றதை செய்யவில்லையோ
உன் உயிரற்ற உடலுக்கு...?
எங்கே பிறந்தாய்...?
பிறந்த இடம் தெரியாது...
அனைவரின் உடமை ஆனாய்..
உடமைதானே நீ.. - உன்
உள்ளம் புரியாதோர்க்கு...
உயிர் பிரிந்த....
மூன்று நாட்கள்..
சவக்கிடங்குதான் - உன்
உறவாச்சோ...?
உறவு கொண்டவர்கள்..
தொலைந்து தான் போனார்களோ....
நல்லடக்கம் செய்வதற்க்கு...?
அனைவரையும்
உடல் வனப்பால்..
பரிதவிக்கவைத்தாய்...
பாவம் நீ...
உயிரற்ற உன்னுடலை
பரிதவிக்க வைப்பார்களா..?
தேடல் முடியாமலே...
முடிந்து போனாய்...
இப்போதாவது முற்றுபெறுமா
உன்னை பற்றிய வதந்திகள்...?
நீ ஒரு பாவப்பட்ட பெண்ணென்று
எப்போதுதான் புரியுமோ....?