என் இருள் வானில்

கேள்விகளால் என் வாழ்க்கை இருளில் சூழ்ந்துக்கொண்டிருந்த சமயம்,
விடையான ஞானொளியை தேடி அலைந்தேன்
சட்டென்று என் கைப்பட்டு பிரகாசம் அடைந்தது.. ஆஹா.. கண்டுகொண்டேன் எனது விடை என்று ஆனந்தம் அடைந்தேன்
மீண்டும் என் கைப் பட்டு அவ்வொளிகள் மறைந்தன, அடடெ என்னாயிற்று !!
அப்பொழுது அறிந்தேன் அவ்வொளிகள் என் பேச்சை மட்டுமெ கேட்கும் என்று
நான் எது சொன்னாலும் எதிர்க்காமல் கேட்கிற செயற்கை மக்களை போல், வளராமல் வளரவும்விடாமல்..
சட்டென்று அவ்வொளிகளை நான் அனைத்தப்பொழுது, ஓர் ஒளி மட்டும் பிரகாசமாய் அடித்தது, என்னவொ என்று ஆச்சரியத்துடன் பார்க்கையில்,
அவளை முதல் முறை கண்டேன்..
கண்ட உடன் காதல்,
கண்ட உடன் மனதில் இன்னும் ஆயிரம் கேள்விகள்,
கண்ட உடன் குழப்பம்,
ஆனால் இவ்வொளிகள் எண்னிடதில் உள்ளதெல்லாம் செயற்கை மற்றும் பகுத்தறிவு இல்லாததென்று தெளிவடைந்தேன், அப்பொழுது தான்
முட்டாள், நானோ முட்டாள் என்று உணர்ந்தேன்
அவளிடம் நோக்கி வேகமாய் சென்றேன், மறைந்திருந்து அவளை பார்த்தேன்,
கண்ட உடன் ஆச்சரியம், அவளின் பிரகாசத்தை பார்து மட்டும் அல்ல, அவளது சாந்தமான குணத்தையும்பார்த்து
கண்ட உடன் மயக்கம், அவளின் வட்ட வடிவத்தை பார்து மட்டும் அல்ல, அவளது அழகான கண்களை போல் இருக்கும் கரும்ப்புள்ளிகளையும் பார்த்து
கண்ட உடன் அதிசயம், அவளின் அழகை பார்த்து மட்டும் அல்ல, அழகும் அறிவும் சேர்ந்து ஒளிர்வதை பார்த்து
அப்பொழுது தான்,
முட்டாள், நானோ முட்டாள் என்று உணர்ந்தேன்
யார் இவள் என்று விசாரித்தபொழுது தெரிந்தது, அழகும் அறிவும் வெளிச்சமாய் சேர்ந்தொளித்த சந்திரனான வெண்மதி என்று!
அவளிடம் பேச நேருங்கும் போதெல்லாம், மேகமாய் அவளது தோழிகள் தடுத்தனர்,
ஒருமுறையாவது பேசமாட்டேனா என்று ஏக்கதில் இருந்தபொழுது, சட்டென்று வெளிச்சமாய் தெரிந்தாள்,
தோழிகள் தடுக்கவில்லை இம்முறை,
ஆஹா நேரம் வந்துவிட்டது
அவளை நோக்கிச் செல்லும்பொழுது, அன்று தான் முதல் சந்திப்பு
சட்டென்று வெண்ணிறமாக ஒளித்தவள் சிவப்பான அரக்கர்கள் நடுவில் மாட்டிக்கொண்டாள்,
காப்பற்ற போராடும்பொழுது அறிந்தேன்,
அவள் மாட்டிகொள்ளவில்லை, அச்சம்பவம் அவளை மேம்படுத்தும்,
மங்கை புனிதமாகிற மாத விடாய் காலம்போல்,
அன்று சந்திர கிரகணம் என்று அறிந்தேன்
அப்பொழுது தான்,
முட்டாள், நானோ முட்டாள் என்று உணர்ந்தேன்
இச்சம்பவத்திற்க்குப் பின்,
அவளுடன் அழகானக் சந்திப்பு
அளவான உரையாடல், அதிகமான பார்வை பரிமாற்றல், முத்து போன்ற சிந்தனைகள், அமுதமான நிலாச்சோற்,
அன்பான தருணங்கள், அவள் என் தோழியாகி காதலியாகினாள்.
நெருக்கத்திர்க்குப் பின் புரிந்தது,
அவளிடம் கற்றது கடுகலவு கள்ளாதது பெருங்கடலவு
அவள் என் குருவாகி தாயாகினாள்.
ஒரு அழகான மேதையிடம் மயங்கி அறிவும் தெளிவும் கற்றுகொள்ளும் என் போதையாக மாறினாள்.
குழப்பம் எனும் வலையில் தத்தளித்த மீனாக என்னை, முத்தம்மெனும் கத்தியால் வலையரத்து விடுவடைத்தாள்
எல்லா கேள்விகளுக்கும் விடை ஆகா விட்டாலும், அவ்விடைகளுக்கான பாதையாய் பிரகாசித்தாள்
அழகான மங்கையிடம் இளைஞர்கள் வசீகரிக்கப்பட்டுதுப்போல், என் வளர்பிறையிடம் அலைகள் வசீகரிக்கப்பட்டாலும்…
இருள் கொண்டிருந்த என் வானில், ஞானமாய் ஒளித்தாள்,
முழு வட்ட பெளர்ணமியாய் காட்ச்சியளித்தாள்
என் மதியழகி என்னுடைய விண்ணழகி எனக்கு பேரழகி !

எழுதியவர் : கெளதம் ப (28-Jan-19, 10:20 am)
சேர்த்தது : Gautam
Tanglish : en irul vaanil
பார்வை : 294

மேலே