குழந்தை உரிமைகள் -1
உரிமைகள் என்றால் என்ன என்ற கேள்விக்கு நமக்குள் ஒர் பதில் ஒளிந்து கொண்டிருக்கும்..
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தன்னுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள உரிமை உண்டு, அவ்வாறன தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கும் அமைப்புக்களும் அவற்றைப் பெறுவதற்க்கு தடையாக இருக்கக்கூடாது, அவ்வாறு தடையாக இருந்தால் அவை உரிமை மீறல் எனப்படும். இவற்றில் இயற்கையாக உள்ள உரிமைகள் மற்றும் சட்டத்தினால் கிடைக்கப் பெறும் உரிமைகள் என்று பார்க்கலாம்...
குழந்தைகள் என்றால் யார்? இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்று கேட்பது புரிகின்றது... இப்போது பிறந்த சிசுவிலிருந்து.. 6 வயது பூர்த்ரியாகதவர்களைத்தானே குழந்தைகள் என்று குறிப்பிடுவோம் என்று கூறத் தோன்றுகின்றது தானே...
தற்போதைய சட்டத்தின் படி (இளைஞர் நீதிச் சட்டம்) குழந்தைகள் என்பவர்கள், 18 வயது பூர்த்தியாக அனைவருமே குழந்தைகள் தான்.. எப்படி புரிந்து கொள்வது... 17 வருடம் 11மாதங்கள் 29 நாட்கள் பூர்த்தியாக அனைவரும் குழந்தைகளே...
இக் குழந்தைகளுக்கு உரிமை உண்டா...? ஆம் குழந்தைகளும் மனிதர்கள்தானே அவர்களுக்கும் தனிப்பட்ட உரிமைகள் உண்டு.
குழந்தைகள் என்பவர்கள் இனம், மொழி, கலச்சாரம், நிறம், மதம், இடம் ஆகிய காரணங்களுக்காக அவர்களுக்கு உரிமைகள் இல்லையென்று மறுக்க முடியாது...
நமது இந்திய அரசானது ஐக்கிய நாடுகள் சபையில் 1992 ஆம் ஆணடு குழந்தைகளுக்கான அனைத்து உரிமைகளும் கொடுப்பதற்க்கு கையெழுத்திட்டுள்ளது...
உரிமைகள் பல இருப்பினும் குழந்தை உரிமைகளை நான்கு பிரிவுக்குள் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது...
குழந்தை உரிமைகள்..
வாழ்வுரிமை
வளர்ச்சியுரிமை
பங்கேற்பு உரிமை
பாதுகாப்பு உரிமை
இந்த நான்கு தலைப்புக்குள் அனைத்து உரிமைகளும் கிடைத்துவிடும்... இந்த உரிமைகள் மறுக்கப் படும்போது அவர்களுக்காக குரல் கொடுக்க பல அமைப்புக்கள் உள்ளன...
இந்த அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் மறுக்கப்பட்ட நிலையில் எத்தனையோ குழந்தைகள் வாழ்வை தேடிக் கொண்டுள்ளனர் அவர்களை கண்டால் தயவு செய்து அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது இந்திய அரசின் இலவச தொலைபேசி எண்ணான 1098 க்கு தகவல் கொடுங்கள் நம்மால் ஒரு தலைமுறை நன்முறையில் வளரட்டும்...
இக் கட்டுரையில் நிறை விசயங்கள் கொடுக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன் ஆனால் வரவேப்பை பற்றி யோசித்து குறைத்துக் கொண்டேன் வாய்ப்பிருந்தால் மீண்டும் தொடரலாம்... நன்றி..