கிஞ்சல் கெஞ்சலா

கிஞ்சல் கெஞ்சலா?
@@@@@@@@
●●●●●●
எம் பேரன நடராசன்னு கூப்புட்டா கோவிச்சிக்கிறான். ஏன்டப்பா நட்டுராசு (நட்ராஜ்), குசராத்துக்காரா?
@@@@
என்னங்க பாட்டிம்மா?
@@@@
உன்னோட மனைவி பொன்மயிலுக்குப் பொறந்த மகாலட்சுமிங்க பேருங்களப் பதிவு பண்ணீட்டீங்களா?
@@@@
பேருங்கள முடிவு பண்ணீட்டோம். ரட்டைக் கொழந்தைங்க. பேருங்க பொருத்தமா இருந்ததாத்தான் சரியாக இருக்கும். ஒரு கொழந்தை பேரு கிஞ்சல்.
@@@@
என்னது கிஞ்சலா? கிளிஞ்சலா?
@@@@@
'கிஞ்சல்' தான் பாட்டிம்மா. வடமேற்கே உள்ள ஒரு மாநிலத்தில உள்ள ஒரு இளந்தலைவர் கட்டிக்கப்போற பொண்ணுப் பேரு கிஞ்சல். அதச் செய்தித்தாள்ல பாத்தேன். அந்தப் பேரையே வச்சுட முடிவு பண்ணிட்டோம்.
@@@@
அப்ப இன்னோரு கொழந்தை பேரு கெஞ்சலா? கொஞ்சலா?
@@@@
ரண்டுமே இல்லங்க பாட்டிம்மா.
ரண்டு மணி நேரம் செலவு பண்ணி வலைத்தளங்களில் தேடி 'கிஞ்சல்'லுக்குப் பொருத்தமா ஒரு பேரக் கண்டுபிடிச்சேன். என்ன பேருடா சாமி.
@@@@@
குஞ்சல்.
@@@@
ஏன்டா கொஞ்சல், கெஞ்சல்ன்னெல்லாம் தமிழ் வார்த்தைகள் இருக்குது. குஞ்சம்ங்கற வார்த்தையும் தமிழ்ல இருக்கு. ஆனா குஞ்சல்?
@@@@@
கிஞ்சல், குஞ்சல். ரண்டுமே இந்திப் பேருங்க. தமிழ் மக்கள்ல பெரும்பாலோர் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தான் வைக்கறாங்க. குஜராத்தில் வேலை பாக்கற நான் எங் கொழந்தைங்களுக்கு வச்சா சரிப்படுமா?
@@@@@@
நீ சொல்லறதும் சரிதான்டா பேரா. சீக்கரம் கிஞ்சலையும் குஞ்சலையும் அவுங்களப் பெத்த அஞ்சலையும் வீட்டுக்கு அழைச்சிட்டு வாடா. நான் எங் கொஞ்சலை ஆரம்பிக்கணும்.
@@@@
இன்னும் ரண்டு நாளைக்குப் பொறுத்துக்குங்க பாட்டிம்மா.
■■■■■◆◆◆■◆■◆◆◆◆◆◆◆◆◆◆●●●●●●●
Kinjal = river bank.
Kunjal = cuckoo, nightingale

எழுதியவர் : மலர் (28-Jan-19, 11:57 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 142

மேலே