அன்புள்ள அண்ணா

அன்று அமாவாசை
அம்மாவும்
அப்பாவும் என்றோ
என்னை மறந்து
மறைந்து போயிருந்தார்கள்
ஒரு தட்டில் புட்டுக்களை
எடுத்து வந்து உண்ண அழைத்தான்
உண்ணவேண்டுமென்றால்
கதை வேண்டுமென்றேன்
நிலாகதை சொல்லி அதில்
இரண்டு புட்டை ஊட்டினான்
பின் நிலா வேண்டுமென்றேன்
மீதமுள்ள ஒன்றை எடுத்து
வானத்தோடு ஒட்டி வைத்து
நிலாவாக்கினான்.
விடாமல் அவனையும்
மீண்டும் கேட்டேன் நிலா பக்கத்தில்
வேண்டுமென்று
சளைக்காமல் அவனுமே
தீர்ந்து போன புட்டை விட்டு
தட்டை காட்டினான்
விடுவேனா அவனை
நிலவில் வண்ணம் வேண்டினேன்
புதினா சட்னியிலே தட்டுக்கு
பச்சை வண்ணமேற்றினான்
இப்படியே
பல கேள்விகளுக்கு
பதிலையும்
சில கேள்விகளுக்கு சிரிப்பையும்
பரிசில் அளித்தான்....
நானும் வளர்ந்தேன்
என் ஞானமும் வளர்ந்தது
இன்று அமாவாசை
அம்மா இருந்தாள்
அப்பா இருந்தார்
அண்ணன் இல்லை
அவர் அன்று கூறிய
நிலாக்கதையை என் மகனுக்கு
நான் சொல்லிகொண்டிருந்தேன் ....
இருளோடு காணாமல் போன அந்த அன்பையும் சேர்த்து

எழுதியவர் : இம்மானுவேல் (29-Aug-11, 7:05 am)
Tanglish : anbulla ANNAA
பார்வை : 634

மேலே