தலைநகரில் தமிழ் திருவிழா போட்டிக் கவிதை
தலைநகரில் தமிழ் திருவிழா....
நினைக்க நினைக்க உள்ளமதில்
தமிழ் தேன் சுவை ஊறுதே
நம் தாய் கொடுத்த முத்தங்கள்
அத்தனையும் தமிழ் கொடுத்ததே
தமிழ் தாயின் கொங்கைதனில்
நாம் உறிஞ்சிய பால் தமிழ்பாலே
தமிழன் உடம்பிலும் மனதிலும்
உறுதியும் ,தன்னம்பிக்கையும
அன்பும், பண்பும் ,அறிவும், குணமும்
அத்தனையும் கொடுத்தது தமிழ்பாலே ,
தமிழன் இதழ் சிந்தும் இன்சுவை
தமிழ் மொழியின் சீராகும் .
தமிழ் இனிது, தரம் பெரிது ,
குணம் பணிவு, எண்ணமோ உயர்வு ,
சொல் அழகு, அதன் சுவையோ தித்திப்பு .
ஐந்திணை விருது பெற
அழைக்கின்ற தமிழ் இலக்கிய சங்கம்
நல்லதொரு வாய்ப்பினை நலமுடன் நல்கிட
முனைந்திட்ட நற்தமிழ் சங்கத்திற்கோர்
பலநூறு நன்றிகள் நற் பண்புடன் அளிக்கின்றேன்.
பேசும் மொழியே தமிழனின் சுவாசம்
அவனின் ஒவ்வொரு மூச்சும்,பேச்சும்
தமிழ் மொழி தந்ததே
தமிழுக்கோர் இன்னல் கண்டால்
, தகர்த்திட புயலாவான் தமிழன்
தமிழை தாயாக பெற்றிட , போற்றிட
தமிழில் உழன்று, தமிழுக்காய் வாழ்ந்து,
தமிழாக உயர்ந்து, தமிழ் எனும் மகுடம் புனைந்து
தரணியில் தலை நிமிர்ந்தவன் தமிழன் அன்றோ
தமிழுக்கு நிகர், தமிழ் மட்டுமே .
.
அஞ்சா நெஞ்சும், அகன்ற மார்பும்
எவரையும் வெல்லும் வீர ஆவேசமும்
கொண்டுதான், செங்கோலோச்சித்தான்
வெற்றியில் திளைக்க வீறுகொண்டு வாழ
பிறந்தவன் தமிழன் அன்றோ
தமிழே தாய் , தாயோ தமிழ்தாய்
தர்மத்தில் தர்மம் தமிழ் வழி வந்தது
தமிழ் மொழி தந்தோ தமிழ் செல்வம்
தமிழன் நெஞ்சில் தவழ்வதோ
தமிழ் மொழியின் பசுமையும், சிறப்பும்
தலைநகரில் தமிழ் திருவிழா
போற்றப்படத்தக்கது
என்றும் வாழும் எங்கள் தமிழின்
மங்கா புகழ் என்றும் வாழ்க , வளர்க
என்று தமிழ் சங்கே முழங்கு.

