நெஞ்சில் வைத்தாய் கொள்ளி

கள்ளியே கலவை சுவை கொண்ட நெல்லியே
காந்த வார்த்தையால் கவர்ந்த மல்லியே
தெருவில் அசைந்தாடி நடக்கும் அல்லியே
உன் அழகால் நெஞ்சில் வைத்தாய் கொள்ளியே

என் நெஞ்சம் துடிக்கிறது உன் பெயரை சொல்லியே
தினமும் உன்னை ரசிக்கின்றேன் உன் வீட்டிலிருந்து தள்ளியே
எனை நீ நினைக்கையிலே என்மீது காதல் வரவில்லையோ கிள்ளையே
நீ காண மறுக்கும் என் முகத்தில் ஏதேனும் சில்லையோ

பெண்ணென உன்னைப் பெற்றெடுத்த அன்னையே
பெரிதுவக்கும் பேரு கொண்ட பெண்மையே
அரிது அரிது அழகோடு அறிவு உண்மையே
அன்பான அறிவு அழகோடு கண்டேன் உன்னிலே.
__நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (29-Jan-19, 9:43 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 226

மேலே