பேரழகியா காதலியா தேவதையா
தாமரையின் தங்கத்தாரகையே
வின்மீன்களுக்கு ஒளிப்பற்றாக்குறை போலும்
அவளின் கண்மீன்களை பார்த்து வின்மீன்கள் கடனாய் கையேந்தி வாசலிலே வரிசையிலே வந்து நிற்கும் அவல நிலை வந்து விடும்
நீ என்னை பார்க்கையிலே அத்தனையும் நடந்தேறிவிடும்
வியந்தேன் விக்கித்தேன்
இச்சையின் உச்சத்திலே
தன்னிச்சையாக படைத்துவிட்டான் அதிலும் இலட்சியத்தை அடைந்துவிட்ட அகமகிழ்வு கண்டிருப்பான் பிரம்மன்
படைத்தவனையே தடுமாற வைக்கும் படபடக்கும் காந்தக்கண்கள்
சிமிட்டினால் வரும் மின்னல்கள்
புருவங்களின் இரு துருவங்களுக்கிடையே மூன்றாம் பிறையாய் காட்சியளிக்கும்
முந்திரிப்பழம் போன்றதொரு மூக்கு
அடுக்கி வைத்த முத்துப்பேழை பற்கள்
தென்னங்கள் குடித்த கன்னங்கள்
அருகே கதிரவனின் வண்ணங்கள் மின்னும் காது மடல்கள் அவை மடல்களல்ல தங்கத்திடல்கள் அவள் செவிப்பறைகளுக்கு.
நீண்ட நெடிய கருநாகத்தை கூந்தலிலே குடி வைத்து பூஜை புனஷ்காரங்கள் செய்வித்து முந்தானைக்குள் மூடி வைக்கிறாள் அது தேவலோக நறுமணத்தை கக்கி கொண்டிருக்கிறது அந்த மணம் மனதை மயக்கிக்கொண்டே இருக்கி்றது
நெற்றியினை பார்க்கும் போதே நம் இதழ்களிலே பற்றிக்கொள்ளும் பாச முத்தம்
கண்ணியவான் என்பதாலும் காதலித்து விட்டதாலும் (நண்பன்) அவள் கழுத்துக்கு கீழே என் கண்கள் கண்டதில்லை
பாதியிலே நிறுத்தி வீதியிலே விட்டு செல்வதாய் நினைத்திட வேண்டாம் அவளை கட்டி முடித்து மீதியினை சொல்கிறேன் இரகசியமாய்,
அவசரம் புரிகிறது ஆனால் அதைவிட அவசியமாய் காத்திருக்கும் தருனமிது.
-குளித்தலை குமாரராஜா