பெண் நெடும் பாதி அங்கம் கொண்ட

நீலமாய் மேனி கொண்ட படைத்தோனே - பெண்
நெடும் பாதி அங்கம் கொண்ட சவ மடத்தானே
பாவம் செய்ய மனம் படைத்த சடத்தானே ( ஜடம்)
கோபம் கொண்டால் கோள் அதிர குதிப்போனே
பாழும் மனதை பாசத்தாலே திணித்தாயே.

வாழும் காலம் ஏற்றம் காண எதைத்தான் நான்
ஏற்றவேண்டும் போற்றவேண்டும் சொல்வாயோ
இப்புவியில் இப்பிறப்பில் என்ன கண்டேன்
காற்றில் செல்லும் தூசு போன்று வாழும் என்னை
காசிநாதா காப்பது உன் கடமை தானே.
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (29-Jan-19, 10:11 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 216

மேலே