கல்வி
பொத்தாம் பொதுவாக பேசி சென்றார்
சைன்ஸ் வாத்தியார்...
ராக்கேட் விண்ணை தாண்டவில்லை!
ஐன்டினின் அறிவியலும் புரியவில்லை!
நியுட்டன் மட்டும் கனவில் வந்தான்...
விழித்ததும் மறந்து போனான்!
கடன் வாங்கி மறந்து போன
கணக்கு வாத்தியார்...
கால்குலசை கரும்பலகையில்
தீர்க்க முயற்சி ...
அடுத்து வரும் பிராப்ளம் நோக்கி
மன அயற்சி...
சத்துணவில் முட்டை உண்ண
தின பயிற்சி...
முட்டை மட்டும் மிஞ்சி போய்
பூஜ்யமாய் கணக்கு பாடம்
வறண்ட வலுக்கைத் தலை
வரலாற்று ஆசிரியர்
ஹரப்பா மோகஞ்சதாரோ செவ்வாய் கிரகத்தில்...
உள்ளுர் வரலாறும் நீர்த்து போனது...
வெள்ளையன் வென்றான்...
கருப்பு எழத்துகள் கரைந்து போய்...
காந்தி மட்டுமே நம்பிக்கை!
பொதுபடையாய் பரிட்சை எழுதி...
எது நன்று என்றறியாமல்...
செம்மறியாட்டில் ஒன்றாகி...
விதி வளர்த்த கன்றாய் கல்வி