அர்த்தம் மாறிப்போனது
புது விதிகள்
படைத்தது
புதுமை பெண்
ஆனது
அச்சம்,மடம்
நாணம்,பயிற்பு
எல்லாம் அர்த்தம்
மாறிப்போனது
தவிர்த்துவிட்டது
அச்சத்தை
உடைத்துவிட்டது
மடமையை
நாணம் கூட
நடிப்பென
வேண்டாமென
உதறிப்போக
பொருள் விளங்கா
பயிற்புக்கு
உண்மை பொருள்
ஆனது