கறிசா

ஏந் தம்பி உங்கூட வர்ற கொழந்தை யாரோட கொழந்தை?
@@@@
எம் பேத்திதான் அக்கா. வெளிநாட்டில வேல பாக்கறானே எஞ் சின்ன மவன் வேலுச்சாமியோட கொழந்தை. நேத்துத்தான் வந்தாங்க.
@@@
அட, நம்ம வேலுச்சாமியோட பொண்ணா? அழகா இருக்கிறடா தங்கப்பா. இவ பேரு என்ன?
@@@@
இவள 'கறிசா', 'கறிசா' -ன்னு கூப்படறாங்க.
@@@@
என்ன கறிடா தங்கப்பா. பெத்த புள்ளைக்கு இப்பிடியா பேரு வைக்கிறது. 'கறி'கூட 'சா' வாம். நல்ல பேருடா.
@@@@
நம்ம ஊரிலயே நம்ம பிள்ளைகளோட தமிழ்ப் பேருங்கள வைக்கற வழக்கம் தடம். மாறிப்போச்சு. உச்சரிக்க முடியாத அர்த்தம் தெரியாத வேற மொழிப் பேருங்கள வைக்கிறதுதான் தமிழ் சனங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. வேலுச்சாமியும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவந்தானே.
@@@@@
நீ சொல்லறதும் சரிதான்டா தங்கப்பா.
■■■■■■■■■■■■◆■■■◆◆◆◆◆◆◆◆◆◆●●●●●●●●●●●●●●
Harija = fair haired or blonde

எழுதியவர் : மலர் (31-Jan-19, 9:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 119

மேலே