கல் சிலை சிற்பி

சுற்றிவர நெட்டையும் குட்டையுமாய்
நின்றிருந்த பாறைகளுக்கிடையில்
சற்று நெட்டையாய் நின்றிருந்த கல் ஒன்று தன்னை
சிற்பி வடிக்காத சிலையென்று பெருமை அடைந்தது !

சுற்றிலும் சிற்பி வடித்த சிலைகளே நிறைந்த
ஆலய மண்டபத்தின் கற் தூண்கள்
சிற்பியின் கலை வண்ணம் பெறாத வெறும்
கற்தூண்களாக நிற்கிறோமே என்று வருந்தி நின்றன !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-19, 10:38 pm)
பார்வை : 182

மேலே