மானிடத்தைக் காக்க வா,
மானுடத்தைக் காக்க வா! கண்ணா!
-----------------------------------------------
குழலிலே இசையானாய் கண்ணா
அலையிலே துயிலானாய் கண்ணா
சலங்கையிலே ஆடலானாய் கண்ணா
தென்றலிலே சுகமானாய் கண்ணா
மழையிலே தண்ணானாய் கண்ணா
தீயிலே ஒளியானாய். கண்ணா
விண்ணிலே ஒலியானாய். கண்ணா
மண்ணிலே உயிரானாய் கண்ணா
வேதத்தின் பொருளானாய் கண்ணா
பார்தனுக்குச் சாரதியானாய் கண்ணா
பாவையரின் கனவானாய் கண்ணா
தேவகியின் தவமானாய் கண்ணா
யசோதையின் நிதியானாய் கண்ணா
கம்சனின் இறுதியானாய் கண்ணா
கீதையின் நாயகனானாய். கண்ணா
,காக்கும் கடவுளானாய் கண்ணா
காத்திருக்கிறோம் கண்ணா
காப்பாற்ற வா
லஞ்சமெனும் பூதகியை
அஞ்சிடாமல் அழிக்கா வா
ஊழலெனும் காளிங்கன் மேல்
ஊழிக்கூத்து ஆட வா
மற்றும் ஒரு கீதை பாடி வா
கற்றும் அறியா பாமரனை
திருத்தி ஆட்கொள்ள வா
நாடு காக்காமல் மக்கள்
நலம் நாடாமல் தன் நலம்
நாடும் புல்லர்களிடமிருந்து
மறுபடியும் ஒரு சுதந்திரம் பெற்றுத்தா
பலபல நரகாசுரர்கள
பாங்காய் வதம் செய்ய வா
மோகினி ஆட்டம் ஆடி வா
மற்றும் ஒரு புது தீபாவளி
மறக்காமல் தந்திட வா
இனிய சுதந்திரம் கண்டும்l
இன்ப வாழ்வு வாழ மறந்தோம்
அடிதடியில் இன்பம் கண்டோம்
ஆறாத்துயருற்ற பூமி மாதாவும்
நாடு கொண்ட மகான் பூமியிலே
பேர் சொல்ல நல்ல பிள்ளை இல்லை என
பெயரளவிளா சுதந்திரம்
பெற்றோம் என நடுங்கி விட்டாள்
நிலத்தாயும்-கொடுமை கண்ணா.
வள்ளலே வந்து விடு
வளமான வாழ்வு கொடு
வறுமை நீக்கிவிடு
வன்முறை இல்லை என செய்துவிடு
அன்பின் பெருமை அறியச்செய்
அன்னை பூமி மகிழ ஆவனச் செய்
அவலங்கள் ஒழியட்டும்
ஆறுதல் பெருகட்டும்
சோதரி மணவாளன்
சேர்ந்து வருகைப் புரியட்டும்
நெற்றிக் கண்ணால் தீமை
எறியட்டும், அவன் மகன்
மயில் ஏறி வந்து வீணர்களை
மறு ஒரு முறை சூரசம்காரம் செய்யட்டும்
புலவர்கள் புது ஆற்றுப்படைப்
படைக்கவும் அந்நிய நாட்டினர்
பலர் நம் நாடு வந்து
பல்லாயிரம் விந்தை
கற்கவும் பாரதத்தில்
கல்லான் என்பான் இல்லை என செய்திடுவாய்
அன்றோ கெளரவர்கள் ஒரு நூறு
இன்றோ ஆயிரமாயிரம் ஆனார்கள்
கண்ணா மணிவண்ணா
வந்திடுவாய் மிக விரைவினிலே
வில்லான் அர்சுனனுடன் வந்து
புனிதப் போர் செய்து மீட்டிடுவாய்
புல்லர்களிடமிருந்து மானிடத்தைக் காத்திடுவாய்.